இயற்கை

ஓயா அடைமழை எங்கும் நீர்
பகலிலே இருள் சூழ்ந்த நகரம்
மின்சார துண்டிப்பு ....இருளைப்போக்க
வீடெல்லாம் இப்போது லாந்தர் விளக்கு
மங்கலான மஞ்சள் ஒளி....இன்னும்
அலுக்காது ஓயாது கத்தும் தவளை
சுவத்துக் கோழி, ஒளிவிடும் மத்தாப்பாய்
மின்மினிகள் ....... எங்கும் ஓர் அசாதாரண அமைதி
நேற்றுவரை ஸ்வர்கமாய்க் காட்சிதந்த நகரம்
இன்று மயான அமைதியில் ....
போருக்குப் பின் அமைதி அதுபோல் காட்சி
ஒரு வார ஓயா மழை இப்படி உருமாற்றம்
செய்தது ........ எதுவும் நம் கையில் இல்லை
ஆக்குவதும் அளிப்பதும் இயற்கையே
அன்று ஒரே நாளில் சில நகரங்களின்
சரித்திரத்தை மாற்றி அமைத்த சுனாமி
நினைவுக்கு வந்தது ......சமீபத்தில் தாக்கி
சென்ற பெரு வெள்ளமும் .......

நாம் சந்திர மண்டலம் செல்ல எத்தனிக்கலாம்
ஒரு வெள்ளத்தின் போக்கை மாற்ற
முடியாது.....பல நாள் ஓயாது பெய்யும்
மழையை நிறுத்த முடியாது,,,,,

இயற்கையாய் இயற்கை அமைதி
ஏற்பட செய்தாலே இவை சாத்தியம்


பின் இயற்கையோடு மனிதனே
உனக்கென்ன போர் தொடுப்பு....
ஆணவத்தை விட்டு வந்து விடு
உண்மையோடு உறவாடு
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திடு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Aug-19, 3:06 pm)
Tanglish : iyarkai
பார்வை : 786

மேலே