காதல்

வாய் மூடி மௌனத்தில் ஆழ்ந்திருக்கிறாய்
நீ பேச வந்ததை அப்படியே உன் கண்கள் பேச,
புரிந்துகொண்டேன் உன் மௌனம் ஒரு
காதல் வேள்வி என்று -யதிகள் நான் அறிவேன்
'சாதுர்மாஸத்தில்' மௌனம் கடைபிடிப்பர்
உண்மை சுயபரிசோகனை இது - கண்ணே
உந்தன் மௌனத்தில் இதைத்தான், காண்கின்றேன் நான்
' உன் கண்ணோ புன்முறுவல் தந்து பேசியது
' கண்ணாளனே , பொறுத்திரு இந்த மழைக்காலம்
போகட்டும்….. பின் சேர்ந்திடுவோம் நாம்
வாழ்க்கை துணைவராய் ஒருவருக்கொருவர் '
மௌனத்தில் ஆழ்ந்திருக்க கண்ணே வாயாய்
மாறுதே கண்ணே உன் கண்கள் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Aug-19, 3:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 246

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே