மௌனக்குடம் உடைத்தால்
மௌனக்குடம் உடைத்தால்
அவள் மௌனக்குடம் உடைத்தால்
நான் மகிழ்ந்தேன்
அருவியாய் ஆர்ப்பரித்தன
அடம்பிடித்த வார்த்தைகள்
சில்லறையாய் சிதறின
அவள் சிந்திய வார்த்தைகள்
தென்றல் காற்றில் தேகம் முகிழ்ந்தது
அப்பப்பா எத்தனை வார்த்தைகள்
மொழிபெயர்க்கிறது அவள் மவுனம்
பேசா வார்த்தைகளில் வந்த ரணம்
பேசியதும் மகிழ்ந்தது மனம்
விழியுருட்டுகையில் எத்தனை வித்தைகள்
சைகையில் என்னை சாய்க்கின்றாள்
கைவளை கொண்டு காக்கின்றாள்!
காதலால் மு. ஏழுமலை