இறுக்கப் பிடித்தது அவன் எண்ணம்

அவன் எல்லோருக்கும் நல்லவன்
எனக்கு அவனோ இனியவன்.
எழிலழகைச் சார்ந்தவன்.
உள்ளத்தால் சிறந்தவன்.

வேல் கொண்டு வினை தீர்க்கும்
முருகன் இல்லை.
அன்பால் அரவணைக்கும்
தவப்புதல்வன்.
தீ கொண்டு சுடர் ஏற்றத்
தேவை இல்லை.
சுடர் ஒளியாய் அவன் விழிகள்.
மலைகளில் தஞ்சம் அடைந்த
வள்ளி மணவாலன் இல்லை.

ஆழ் கடலின் ஓசையுடன்
சங்கமைத்த மண்ணின் மைந்தன்.
அவன் தேன் தமிழை
சுவைப்பதிலே பெரும் தலைவன்.
திருத்தமாக தமிழை
நிறுவும் செந்தமிழன்.


தாய்க்குத் தனி மகன்
சிந்தனையில் சிறந்த மகன்.
தாடி மேல் அவனுக்கோ மோகம்.
தாவணி மேல் இல்லை தாகம்.

பக்தியும் இல்லை பெத்தவளை
ஒத்தி வைப்பதும் இல்லை.
கண்ணும் கருத்தும்அவன் கடமை
எண்ணும் எழுத்தும்அவன் உடமை.


என்னையும் கவர்ந்தான் இதனால்.
உள்ளத்தில் பதிந்தான் தமிழால்.

தமிழை சிதைப்பவளையும் கவி
செதுக்க வைத்தான்.
பலஅரங்கங்களிலும் தலை நிமிர
வைத்தான் .
இன்றும் மறக்க மனம் இல்லை
இறுக்கமான பிடியிலே அவன்
எண்ணம் .

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (18-Aug-19, 4:17 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 135

மேலே