இனியவள் சகாப்தம் - 2

இனியவள் சகாப்தம் - 2
(டைரி -2001)

யாரைக் கேட்கிறாய்
உன் நாத ஈணம் கவர்தலற்று
சுவரம் ஏகிய காம ராத்திரி
புதிராமல் திகழ்ந்த வேத ஜுவாலையைக்
கத்தரித்தெறிந்தாய் கண் சிவப்பி ..
காடிற் மலர்ந்த
ருது வாசனைத் தேடி
ஊனிற்கொடியதொரு
திரவிப்பல் கோரை கடிஇயைய ..
காந்தள் விரவி விடரித் துள்ளின
நீர் அங்கமே ..
இருதயம் கொரித்து அகவல் எய்தி
அத்தம் செப்புகிறேன்..
மாழ்தல் மடிமிசை மார் இரண்டினம் கைக்கொப்ப
விடியல் நரைத்த மாநிசிப் பருகி ..
பாரித்த விடிவெள்ளி ஓடைக்கறைப் பூசி
அதுஇல் மூடிய இமை சாட்டி ..
மறந்த நன் தீமை
காவியக் குல அழி அனத்தூற்றி
எழில்வஞ்சம் பிறப்புமைப் பெருவித்தது
விந்துநன் சாட்சி செய்குவின்கண் ..
நித்திரைக் கொல் கொண்டுணர்த்தி
காந்தமிள சதுர் நீத்தி
அவிர ..
வஞ்சமிழித்ததோர் இரவென்றாய் ..
இன்றேன்
வஞ்சமிழித்ததோர் இரவென்றாய்
என் குருதி முரசே ..
விளித்ததன் பாவத்தில்
விறலிகாண் தூதேகி
வஞ்சமிழித்ததோர் இரவென்றாய்
என் குருதி முரசே ..
புரதி நின்
புருஷ சூக்தம் பரிணய வேதி நின்றான்
திசைக்காண்
கனமல்லிகை வழி சூடி
மாரணம் ஈவித்தாய் தற்பொழிவித்தாய்
ராஜகர்வமே

எழுதியவர் : அனுசரன் (18-Aug-19, 12:58 pm)
பார்வை : 131

மேலே