காத்திருப்பேன்

நினைவுகளின் விம்பங்கள்
சிதறிப்போனதே பூவே உன் வார்த்தை கணை பட்டே...
நிழல்களின் ஈரமும் வறண்டு போனது
தேவி உன் அனல் பார்வை பட்டே.....
பூந்தெனறலாய் வந்து பூவருடிய காற்றும்
புயலாகிப்போனதும் உன்னால் பெண்ணே.....
விழிகள் ஆயிரம் கனவுகள் கண்டதும் அன்று....
விழிநீர் வடிந்து காத்திருக்கேன் இன்று.....
மீண்டும் வருவாய்-என்
வாசல் தேடி வசந்தம் தருவாயெனறே....
தாய் முகம் தேடும் சேயாய்
உன்முகம் பார்த்திருக்கே ன்- என்
பெண் பூவே...........

எழுதியவர் : janaarthanan (8-Sep-11, 2:46 pm)
சேர்த்தது : janaarthanan
Tanglish : kaathirupen
பார்வை : 282

மேலே