அன்பே அமுதே அருங்கனியே - கமாஸ் ராகம்

சிவாஜி கணேசன் - பதமினி நடித்த உத்தம புத்திரன் திரைப்படத்தில் மருதகாசி பாடலியற்றி, T.M.சௌந்தரராசன், P.சுசீலா, கமாஸ் ராக அடிப்படையில் பாடிய ஒரு அருமையான பாடல் ’அன்பே அமுதே அருங்கனியே’

அன்பே..! அமுதே அருங்கனியே!
அன்பே..! அமுதே அருங்கனியே!
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே!
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே!
அன்பே..! அமுதே அருங்கனியே!

ஆண்:

எண்ணமெல்லாம் நிறைந்தே கண்ணே
எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே
இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே (எண்ணமெல்லாம்)

கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி (அன்பே)

பெண்:

என்ன தவம் செய்தேன் கண்ணா
என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா (என்ன தவம்)

இருவரும் ஒன்றானோம் மதுவுண்ணும் வண்டானோம்
இருவரும் ஒன்றானோம் மதுவுண்ணும் வண்டானோம்

பெண்: ஸ்வாமீ
ஆண்:- கண்ணே
பெண்:- இதுவே, பேரின்பம்

இருவரும்: அன்பே..! அமுதே அருங்கனியே!
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-19, 9:51 pm)
பார்வை : 124

மேலே