வேலைத்தேடும் போராட்டம்

எதிர்காலமென்ற கனவை காண
ஆர்வமாக கல்லூரி செல்லும்
இளைஞர்களின் இன்றைய
அவலநிலை என்ன ? என்ன ?
எத்தனையோ தடைகளைத் தாண்டி
பட்டம் பெரும் அந்த பட்டதாரிகளின்
பரிதாபங்களை இங்கு
எடுத்துரைக்கிறேன்....

தானாக விடியும் விடியல்
அவன் எழும் போது
தண்ட சோறாக விடிகிறது

தேர்வின் கேள்விகளுக்கு கூட
தயங்காதவன் அந்த
தெருக்கள் கேட்கும் கேள்விக்கு
தயங்கி தவிக்கிறான்...

மேலும் கீழுமாக
பிறர் பார்க்கும் ஒற்றைப்பார்வையில்
அவன் படும் இன்னல்களை
எழுத்துக்களால் எழுதிவிட முடியாது!!

பகுத்தறிவு கொண்டவனாக
அவன் இருந்தாலும்
அடுத்தவர் விமர்சிக்கும் போது
பரிதாபப்படுகிறான்!!

அடுத்து ஒரு வேளை என்பதே
அவனின் அனைத்து கேள்விகளுக்கும்
பதிலாகும்...

பதிலை கண்டுபிடிப்பவன் அதனை
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்
என்பதே -- நிராகரிக்க
முடியாத உண்மையாகும்!!

ஒற்றை பணியிடத்திற்கு
ஒருநூறு விண்ணப்பங்கள்
ஒரு நபர் தேர்ச்சியானால்
ஒவ்வொரு நபரும் வெளிநடப்பு...

நேர்கானல்களை
சந்திக்கின்ற பொழுது
நெஞ்சில் தோன்றும் கேள்விகளுக்கு
கடவுளால் கூட
பதில் சொல்ல முடியாது!!

பணிக்காக காத்திருக்கும்
அந்த எதிர்ப்பார்புகளின் போது
பழகியவனும் பகையாளியாகிறான்...

நண்பனும் எதிரியாக
பார்க்கப்படுகிறான் -- எதிரியாக
பார்க்க எந்த விருப்பமும் இல்லை!
இதற்கு எல்லாம் காரணம்
அந்த எதிர்காலத்தின் மீதான
வருத்தம் தான்!!

வேலையில்லாமல்
வீட்டிற்கு சென்றால்
அவன் தோள்களில்
குடியேர காத்திருக்கும்
அவமானங்கள்!!

மேலும் ஒரு
கூட்டனி கிடைக்குமா? என்பதே
தோல்வியின் எதிர்ப்பார்ப்பு...

பணத்தை மீண்டும் கொடுக்க
தயங்கும் நடுத்தர குடும்பம்...

அவரிடம் ஒரு வேலை
இவரிடம் ஒரு வேலை என்பதே
அவனின் அசையை
அதிகரிக்க வைக்கும்
அக்கம் பக்கத்தின் பேச்சு!!

அடுத்த நாளே வேண்டாமென்று
நினைக்கும் மனநிலை...
அவனுக்கு வேலை இல்லையென்று
முடிவு செய்யும் உறவுகள்!!

நெஞ்சோரத்தில் கனவொன்று
நெடுநாளாக வளர்ந்து வந்தாலும்
வளரும் முன்னே
கலைக்க முற்படும் கவலை!!

வைராக்கியத்தில் வாழ்ந்து
பழக்கப்பட்டாலும் -- வயிற்றுக்கு
பதில் சொல்லமுடியாத பசி!!

கண்மூட விருப்பம் இல்லையென்றாலும்
இருள் தேடி வரும் இரவு
நாளையாவது வேலை கிடைக்குமா ?
என்ற கேள்வியோடு மீண்டும்
தொடர்கிறது ஒரு
வேலைத்தேடும் போராட்டம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (22-Aug-19, 7:15 pm)
பார்வை : 261

மேலே