அழகியல் அதிகாரம் 2 கண்ணில் காஷ்மீர்
கவி முன் குறிப்பு :
வேய்ங்குழல் மென்னிதழில் வைத்து இசைத்திடும்
கார்க்குழல் பூபாள மே !
---அழகியல் அதிகாரத்தில் பூபாளத்திற்குப் பதில்
காரக்குழல் மோகன ராகமே அல்லது மோகனமே என்று
இரண்டு அழகிய பரிந்துரை கொடுத்திருந்தார்
கவிச்சகோ சிட்னி வாசவன் . அதையேற்று அழகியலை
இன்னும் தொடர்கிறேன் .
பார்க்கும்நீ பார்வையில் காஷ்மீர் பனிப்பொழிவு
கார்க்குழல் மோகனரா கம்
கண்ணினில் காஷ்மீரம் கன்னத்தில் சேலம்
பொழியும்குற் றாலாம்மோ கம்
செம்பவளத் தேனிதழ் செந்தமிழ் பாடிட
மோகவா சல்திறக் கும்
முத்துப்பந் தல்தனில் மோகனரா கம்பாடு
தித்திக்கும் தேனிதழி னில்
மோகன ராகம்பா டும்மோ கமேமுத்துப்
புன்னகை சிந்திடா யோ