அவள்
கார்மேகப் போர்வையில் இருண்ட வானம்
கொட்டியது மழை மலையில் தோன்றி
மறைந்தது ஓர் கொடி மின்னல்
மின்னல்மோகினிப்போல்…….
புலர்ந்தது காலைப்பொழுது என்முன்னே
கோலம்போடக் கண்டேன் எதிர் வீட்டில்
கொடி இடையாள் அவளை -மனதில்
தோன்றியது இவள்தானோ நேற்றிரவு
என்முன் தோன்றி மறைந்த அக்கொடிமின்னல்