நித்தமும் மாற்றம் செய்யும் நித்தியானந்தன்

என்ன தவம் செய்தேனோ
உன்னை நாம் இப்படிக் காண
மண்ணில் நீ பிறந்ததனால்
மண்ணுக்கு பெரும் பெருமையாச்சோ

மாணிக்கத்தின் ஒளியைப் போலே
உன் வார்த்தை மின்னுதையா
வாலிப உருவத்தோருக்கு
வனப்பான வேந்தன் நீயே

இரஞ்சிதமான சூழலாலே
இரம்யமாய் வாழும் குருவே
நித்தியமும் இன்பம் கொள்ளும்
நித்தியா நந்தனே நீ வாழ்க

பித்தராய் பலரை மாற்றி
சித்தராய் வாழும் கோவே
பக்தைகளின் பஞ்சு மடியில்
நித்தமும் குழந்தை நீயே

அர்த்தநாரியாய் நீயும்
அழகாய் காட்சியும் தந்தாய்
கிருட்டிணன் சிவன் பிரம்மனாய்
வேடத்தால் வேதம் காத்தாய்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Aug-19, 8:58 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 171

மேலே