காசெதுவும் தேவையில்ல

போட்டா புடிச்சா ஆயுசு
குறையுமுன்னு
சொன்னாங்க புள்ள
அதுகொரு காரணம்
இருந்தது இல்ல
அப்ப போட்டா புடிக்க
காசுவேணும் புள்ள
அதனாலேயே நம்ம
எளமைய
நாம பாக்கமுடியல
இல்ல
அந்த தொல்ல எதுவும்
நம்ம புள்ளைகளுக்கு
இல்ல புள்ள
போட்டாவா புடிக்குதில்ல
ஆயுசு கொறயல புள்ள
அதுக எளமைய பதியுது
இல்ல
நம்ம போட்டாவ நாமே
புடிப்போம் புள்ள
அதுக்குதான் செல்லு
இருக்குதில்ல
நம்ம புள்ளைங்க அவுக
புள்ளைகளுக்கு
காட்டட்டும் புள்ள
இதுக்கு
பெருசா காசெதுவும்
தேவையுமில்ல..,