காதல்

காதல்🌹

கண் இமைக்கும் நேரத்தில் காதல் வந்தது
காரணம் சட்டென்று புரியவில்லை.
பின்பு தான் புரிந்தது, தெரிந்தது, காதலும் இயற்கையும் ஒன்று என்று.
இயற்கையை மானுடத்தால் ஓரளவே கனிக்க முடியும்,
கனிக்க இயலாத பல அரிய வகை பொக்கிஷங்களை கொண்டது தானே இயற்கை என்னும் அற்புதம்.

இயற்கை மானுடத்துக்கு அளித்த வரமே காதல் என்ற மகோன்னதம்.

காதல் அன்பின் வழியா
அல்லது சுயம்பா?
காதலுக்கு பல விளக்கங்கள் கூறினாலும் ஆண்,பெண் கொள்ளும் காதலே பேசும் பொருளாக இன்றளவும் உள்ளது.

மனித வாழ்வில் பல மனோபாவம் அவனுள் அவன் வாழ் நாட்களில் ஏற்படுகிறது.
அதில் காதல் என்ற அழகிய உணர்வு அவனை ஆகாயத்தில் பறக்க செய்கிறது.
ஆனந்தம் அடைய செய்கிறது.
அந்த அற்புத உணர்வு அவன் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கிறது.

காதல் விடியலில் இலை மேல் படுதுறங்கும் பனித்துளி போல் பரிசுத்தமானது.
நெஞ்சங்களே நினைவில் கொள்ளுங்கள்
இந்த காதலால்
இந்த உலகையே மாற்றலாம்.
மிக பெரிய சக்தி காதல்.
மனிதகுல வாழ்வுதனை உயர்தலாம்.
காதல் மூலம் மட்டுமே சமதர்ம சமூகத்தை, சமுதாயத்தை உருவாக்கலாம்.
மனித நேயத்தை உலகம் முழுவதும் பரவ செய்யலாம்.
இவை அனைத்தும் செய்யலாம் காதலின் மான்பின் அறிந்து, புரிந்து காதல் செய்தால்.....

- பாலு.

எழுதியவர் : பாலு (25-Aug-19, 10:43 am)
சேர்த்தது : balu
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே