நிலவு மகள்
பால் நிலவாய் மிதந்து வந்தது நிலவு
குளிரில்லா நிலவாய் தனிமையில்
தனித்து முற்றத்தில் உலாவிய என்னைக்
காய்த்து, 'ஏன், நிலவே இன்று எங்கு
தொலைத்தாய் உன் குளிரை தண்ணொளியை
என்றேன்'' நிலவு சொன்னது 'அதோ வருகிறாள்
பார் உன் காதலி உன்னவள் அவளிடம்,
'திருடிக்கொண்டாள் அவள் என்னிடம்
இதை உனக்காக …… ' குளிர்ந்தேன் நானும்
அவள் வருகையில், அவள் ஸ்பரிசத்தில்
அந்த வான் நிலவின் இதம் முழுதும் அதில் kandu.