பெருமூச்சோடே கூட்டத்தின்

பேருந்தில் திடீர் நெடும்பயணம்
பெரிய கடைத்தெரு நிறுத்தத்தில்
பேரழகியாய் ஒருத்தி எறினாள்

பெருமூச்சோடே கூட்டத்தின் பார்வை
பெரிய இருக்கையில் தனியாளாய் அவள்
புறப்பட்டது பேருந்து அடுத்த நிறத்தத்தில்

தும்பிக்கு தோலால் சட்டை மாற்றியது போல்
தும்பை பூ நிறத்தில் கிண்ணென்று ஆடையில்
தொட்டுக் கொண்டு அமர்ந்தான் கட்டழகியை ஒருவன்

விட்டு விட்டு அடைக்கும் இளகிய நெஞ்சினராய்
விவரங்கள் தெரியாமல் வேல் பார்வையால்
வெட்டிவிடும் தன்மையில் பேருந்தினர் பார்க்க

வித்தியாசத்தை உணர்ந்த குதுகலிக்கும் இருவரும்
விவகாரமான முறையில் முணுக்கென சிரித்தனர்
விரைவாய் செல்லும் பேருந்தில் என்றும் இது போலே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Aug-19, 9:58 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 67

மேலே