சொல்லடி சூப்பர் டமில் செல்வி

கண்ணில் எத்தனை வெளிச்சம்
மின்னல் என்றல்
போரடிக்கிறது என்கிறாய்
கன்னத்தில் இளம்சிவப்பு
மாங்கனி என்றால்
அலுத்துவிட்டது என்கிறாய்
செவ்விதழில் புன்னகை
முத்துக்கள் என்றால்
ஐயோ போதும் என்கிறாய்
எப்படிச் சொல்வது ?
மொழியில்லா மைமில்
அபிநயித்துக் காட்டவோ
சொல்லடி என்
சூப்பர் டமில் செல்வி !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Aug-19, 11:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே