பீலா கீலா

ஏன்டா பெருமாளு உம் பையனுக்கு அவந் தாத்தா பேர வைக்கச் சொன்னேன். நீ எம் பேச்சை கேக்கல.
@@#@#3
அம்மா, அப்பா பேரு நாகப்பன். அந்தப பேர அவனுக்கு வச்சிருந்தா யாரும் அவனை மதிக்கமாட்டாங்க. அதனாலதான் அவனுக்கு 'நாகர்'னு பேரு வச்சேன். பேரெல்லாம் 'ர்', 'ஸ்', 'ஷ்', 'ஜ்'ஙகற மெய்யெழுத்தில முடியற பேருக்குத் மதிப்பு. தமிழ் பேரை வச்சா ஒரு பயல் மதிக்கமாட்டான்.
@@@@#@@
அது சரி. அமெரிக்காவில் இருக்கிற எம் பேர நாகரு அவனோட மனைவிக்கு பொறந்த ரட்டை பெண் கொழந்தைகளுக்குப் பேரு வச்சுட்டானா?
@#@@@@@@
வச்சுட்டாம்மா. ஒரு கொழந்தை பேரு 'பீலா' (Beela) இன்னோரு கொழந்தை பேரு 'கீலா' (Keela).
@#######
என்னது? பீலா, கீலாவா? என்ன அநியாயம்டா?
என்ன செய்யறது. உனக்கு உன்னோட அப்பா 'தமிழ்மல்லன்'னு அழகான தமிழ்ப் பேர வச்சாரு. உன் மகன் 'லா, லா'ன்னு முடியற அர்த்தம் தெரியாத பேர வச்சிருக்கிறான்.
"■■■■■■■■■■■■◆■◆◆◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Beela=Noble
Keela=Companion,Fair and slender

எழுதியவர் : மலர் (30-Aug-19, 7:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 79

மேலே