அழகி கலகி

டேய் நண்பா, ஊரில இருக்கிற பெண்கள் எல்லாம் உன்னோட மனைவிக்கு 'கலகி'ன்னு பட்டப்பேரு வச்சிருக்கிறாங்கடா.
@@@@@@
என் மனைவி அவள் பேருக்கேத்த மாதிரி நல்ல அழகி. எங்க குடும்பத்த பொருத்தவரைக்கும் ரொம்ப நல்லவளா இருக்கறா. அவளுக்குப் போயி 'கலகி'ன்னா பட்டப்பேரு வச்சிருக்கிறாங்களா? எல்லாம் பொறாமை பிடிச்ச பொண்ணுங்கடா.
@@@@@@@@
பொறாமை இல்லடா. உன்னோட மனைவி ஒற்றுமையா இருக்கிற ரண்டா மூணுபேரப் பாத்தாவே ஒரு வாரத்தில அவுங்களுக்குள்ள கலகத்தை மூட்டிவிட்டு பிரிச்சிட்டாங்கடா
@@@@@
நீ சொல்லறத என்னால நம்ப முடிலடா.
@@@@@
என் மனைவி முத்துவும் பக்கத்துத் தெரு பழனி மனைவி தங்கமும் சின்ன வயசில இருந்தே உயிர்த்தோழிங்க. அவுங்களையே கலகமூட்டி பிரிச்சு வச்சுட்டாங்கடா உன்னோட அழகி. பழனியும் எங்கூட ரண்டு வாரமா பேசறதில்ல.
@@@@@
அழகி இப்படிபட்டவன்னு நாங் கனவிலும் நெனைக்கிலடா நண்பா. எங்க பாட்டி பேச்சை கேக்காம விட்டது ரொம்ப தப்பா போச்சுடா.
##@@@@@
பாட்டி என்ன சொன்னாங்க.
@@@@@@@
"டேய் கண்ணா, அழகான பொண்ணுங்க ரொம்ப ஆபத்தானவங்க. சுமாரா இருக்கிற பொண்ணா பாத்துக் கட்டிக்கிடா'ன்னு சொன்னாங்க. ஊரில கலகம் பண்ணற அழகி எங்க குடும்பத்தில என்ன செய்யப் போறாளோ? நெனச்சாவே பயமா இருக்குதடா.
@@@@@
அதச் சமாளிக்கிறது உந் திறமைடா, நண்பா.

எழுதியவர் : மலர் (30-Aug-19, 3:26 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 102

மேலே