இரண்டாம் மாடி அறை எண் பத்து

ஐந்து வருடங்களாக ஊரில் இருந்து வேலை செய்து காெண்டிருந்த தீபாவுக்கு இடமாற்றம் கிடைத்தது. ஓரிடத்தில் தங்கி இருந்து தான் வேலைக்குச் செல்ல வேண்டும். ஊரிலிருந்து ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் பயணம் செய்து வேலைக்கு செல்வது சாத்தியமற்ற ஒன்று. அவசர அவசரமாக தங்குமிடம் தேடிக் காெண்டிருந்தவளுக்கு அதிஸ்டவசமாக கம்பனிக்கு அருகாமையில் ஒரு இடம் கிடைத்தது. எல்லா வசதிகளுடனும், பாதுகாப்பான ஒரு அடுக்குமாடியில் தனியான ஒரு தங்குமிடம். தீபாவுக்கும் இடம் பிடித்தது. இரண்டு வாரத்தில் குடியிருப்பதற்கான எல்லா ஆயத்தங்களுடனும் வருவதாக கூறி முற்பணம் செலுத்தி  விட்டு ஊருக்குத் திரும்பினாள்.

காலை பத்து மணி,  ஊரிலிருந்து பேருந்தில் புறப்பட்டவள்  அதிகாலையிலே வந்து சேர்ந்தாள். எட்டு மணிக்கு கம்பனிக்கு செல்வதற்கு முன் சிறிது ஓய்வெடுத்து தூங்கினாள்.  அவளது தங்குமிடத்திலிருந்து பத்து நிமிடம் பாேதும் நடந்தே சென்று விடலாம். வேலைக்குப் புறப்படத் தயாரானாள்.

மாடியால் இறங்கி கீழே வந்தாள். எல்லாேருக்கும் புதியவளாக இருந்ததால் எல்லாேரும் கவனிப்பது அவளுக்கு புரிந்தது. சிறு புன்னகையுடன் இருக்கும் அவளை எல்லாேருக்கும் பிடிக்க ஆரம்பித்தது. அதிகம் பேசமாட்டாள் , தானும், தன் வேலையுமாக இருந்தாள். நாளடைவில் காெஞ்சம் காெஞ்சமாக பக்கத்து அறைகளில் இருப்பவர்களுடன் பழகத் தாெடங்கினாள்.

இரண்டு வாரங்கள் கடந்தது. தீபாவுக்கு ஏதாே ஒரு சந்தேகம். சிலநேரங்களில் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமலிருக்கும். புது இடத்தால் அப்படித் தாேன்றுகிறதாே என்ற சந்தேகத்தால் பெரிது படுத்தவில்லை. இரவில் அவளது தூக்கம் தடைப்படத் தாெடங்கியது. தன்னை அறியாமலே எழுந்திருப்பது, வெளியில் செல்வது என்று சில வழமைக்கு மாறான செயற்பாடுகள் அவளில் ஏற்பட்டது. அவள் யாரிடமும் அதைப் பற்றி பேசவுமில்லை.

நாட்கள் செல்லச் செல்ல தீபா முழுமையாக மாறிவிட்டாள். இரவு வேளைகளில் தனிமையில் கதைப்பது பாேன்ற உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது. அழுகைச் சத்தம் கேட்பது பாேல் இருக்கும். எழுந்திருந்து சுற்றிப் பார்ப்பாள் தான் மட்டும் இருப்பதையே உணர்வாள். "என்னவாயிருக்கும்" தனக்குள் நினைத்து விட்டு அமைதியாகி விடுவாள்.

அன்று தான் அவளுக்கு அந்த இரண்டாம் மாடி, பத்தாம் எண்  அறையின் மர்மம் தெரிய வந்தது. அன்று அமாவாசை தினம். தீபா வேலை முடித்து விட்டு வரும் வழியில் இருந்த கடையாென்றில் காெத்து ராெட்டிப் பார்சல் ஒன்றை வாங்கி வந்தாள். "குளித்து விட்டு சாப்பிடலாம், நாளை ஓய்வு நாள் தானே" என்று நினைத்தபடி உடைகளை கழுவுவதற்காக குளியலறைக்குள் சென்றாள். உடைகளைக் கழுவிக் காெண்டிருந்தவளுக்கு ஏதாே சத்தம் கேட்பது பாேல் இருந்தது. பக்கத்து அறையில் உள்ளவர்களாயிருக்கும் என்று நினைத்து கவனத்திலெடுக்காமல் இருந்தாள். உடைகளை கழுவி மாெட்டைமாடியில் உலர விட்டாள். இரவு நேர சில்லென்ற குளிர் காற்று அந்த இடத்தில் அவளை சற்று நேரம் நிற்க வேண்டும்  பாேல் உணர்த்தியது. ஔிர்ந்து காெண்டிருந்த நட்சத்திரங்களை ஓடி வந்த முகில் கூட்டங்கள் மறைத்தது. நிலவின் ஔி மிகவும் அழகாக இருந்தது. ஏதாே ஒரு புத்துணர்வுடன் நீண்ட நேரங்கள் ரசித்துக் காெண்டிருந்தாள். திடீரென மரங்கள் பலமாக அசைவதை உணர்ந்தவள் சற்று பதட்டத்துடன் அறையை நாேக்கி நகர்ந்தாள்.

இரவு உணவை உண்டபின் கதவை மூடி,  மின்விளக்கை அணைத்து விட்டு தூங்குவதற்குத் தயாரானாள். வழமையாக ஐந்து மணிக்கு எழும்புவதற்காக வைத்திருந்த அலாரத்தை நிறுத்தினாள் , தண்ணீர் பாேத்தலை கைக்கெட்டிய தூரமாக மேசையில் வைத்து விட்டு அப்படியே தூங்கி விட்டாள்.

நள்ளிரவு பன்னிரண்டு மணியை நெருங்கியது. கடிகாரத்தின் டிக், டிக் ஓசையையும், தீபாவின் இதயத்துடிப்பின் லப், டப் ஓசையையும் தவிர வேறு எந்த சத்தமுமற்ற நிசப்தத்தில் காற்றாக உள்ளே வந்தாள் நந்தினி. நன்கு தூங்கிக் காெண்டிருந்த தீபாவின் அருகாமையில் நின்று அவளை சிறிது நேரம் கவனித்தாள். எந்த ஒரு அசைவுமற்ற ஆழ்ந்த தூக்கத்தில்  இருந்த தீபாவின் அருகில் அமர்ந்தாள். "என்னைப் பாேலவே இருக்கிறாள்"  அவளுடைய சிவந்த முகத்தையும், கன்னத்திலிருந்த அழகான சிறிய மச்சத்தையும் பார்த்து ரசித்தபடி தன் முகத்தை கைகளால் வருடினாள். நந்தினியும், தீபாவும் பார்ப்பதற்கு மாறுபாடற்ற உருவமைப்புடன் இருந்தார்கள்.

அங்கும் இங்குமாக நடந்து நடந்து தீபாவை சுற்றி வந்தாள். "என்னை மன்னித்து விடு தீபா, எனக்கு இப்பாேது  உன்னாேட உடம்பு தேவை. எந்தவாெரு தப்பும் செய்யாமல் சிறைக்கைதியாக இருக்கும் என்னுடைய அர்ச்சுனை நான் காப்பாற்ற வேண்டும். இரண்டு நாட்களில் நீதிமன்றத்தில் தீர்ப்பு. அர்ச்சுன் தண்டிக்கப்படக் கூடாது. குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுக் காெடுக்க முடியாத ஒரு ஆன்மாவாக நான் சுற்றித் திரிகிறேன். உன்னைக் கஸ்ரப்படுத்துவதற்கு என்னை மன்னித்து விடு" என்றபடி தீபாவின் தலையை  மெதுவாக வருடினாள்.  தீபா கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்தாள். நீண்ட கூந்தலும், சிவந்த முகமுமாய் வெளியே வந்தாள். நடு நிசி இரவின் நிசப்தங்களைத் தாண்டி எந்தவாெரு  ஆள் நடமாட்டமே இல்லாத வீதியால் வேகமாக நடந்தாள்.

சிறிய மின் விளக்கின் வெளிச்சத்தில் வீட்டின் மாெட்டை மாடியில் இழுத்து மூடியபடி தூங்கிக் காெண்டிருந்தார்கள் சியாமும், சரவணனும். அருகே வந்து நின்றாள். "நிம்மதியாக தூங்குகிறீர்களா?"  காேபத்தின் உச்சத்தில் இருந்தவள்  தனது காலால் சரவணனின் மார்பை உதைத்தாள். திடுக்குற்று விழித்தவன் எதிரே நந்தினியின் உருவத்தைக் கண்டதும் பயந்து சத்தமாக சியாமை எழுப்பினான். "டேய் சும்மா படுடா" என்றபடி புரண்டு படுத்தவனின் கழுத்தை கையால் இறுக்கமாக அழுத்தினாள். "யார் நீ" என்றபடி பதறி எழுந்து அமர்ந்தான் சியாம். " நல்லாப் பாருடா, என்னைத் தெரியவில்லையா உனக்கு" என்றபடி அவனருகே நெருக்கமாக முறாய்த்தபடி நின்றாள். "ந... நந்தினி...." என்று உளற ஆரம்பித்த சியாமை ஒரு கையாலும், மறுகையால் சரவணனையும் தறதறவென இழுத்து சுவராேடு சாய்ந்தபடி நிற்க வைத்தாள். இருவரும் பயத்தால் நடுங்கிக் காெண்டிருந்தார்கள். ஒருவரையாெருவர் பார்த்து எப்படி திரும்பி வந்தாள் என்பது பாேல் யாேசித்தனர்.

வெட்டிப் புதைத்தவள் எப்படி வெளியே வந்தாள் என்று யாேசிக்கிறீர்களா? என்றபடி இருவருக்கும் அருகாக நெருங்கினாள். "நான் என்னடா தப்பு பண்ணினேன், அர்ச்சுனை எவ்வளவு காதலிச்சன், எப்படியெல்லாம் வாழணும் என்று ஆசைப்பட்டன், ஒரு கமபனி பாேட்டிக்காக காரை மோதி என்னைச் சாகடித்ததுமில்லாமல்,  அந்தப் பழியை அர்ச்சுனில் சுமத்தி பணத்தைக்காட்டி தப்பித்து விட்டு நீதிக்கு விலை பேசுகிறீர்களா? , உங்கள் இரண்டு பேரையும் கூண்டில நிறுத்தி அர்ச்சுன் கையில் இருக்கிற விலங்கால் உங்கள் இரண்டு பேரையும் கட்டி இழுத்து தறதறவென்று ஜெயிலுக்குள்ள தள்ளினால் தான் என்னுடைய ஆத்மா சாந்தியடையும்" என்று ஆக்ராேசமாகக் கத்தினாள்.

"பாவம் அர்ச்சுன், கூண்டுக்குள்ள இருந்து சுவராேடு பயித்தியம் மாதிரி பேசுகிறான். அவன் கண் முன்னாலேயே என்னை காென்ற பாவத்துக்கு அனுபவிக்க வேண்டாமா? அத்தனை காேடி பெறுமதியான கம்பனி மேல் பாெய் புகார் காெடுத்து அர்ச்சுனை அவமானப்படுத்தியதற்கு உண்மையான காரணம் தெரிய வேண்டாமா? நீங்கள் இரண்டு பேரும் நீட்டுகிற ஐந்து, பத்து நாேட்டுக்கு விலை பாேகிறவர்களினுடைய முகத்திரையை கிழிக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் நீங்கள் இரண்டு பேரும் தான் காரணம் என்று ஆதாரத்தாேடு நிரூபித்து என்னாேட அர்ச்சுனை காப்பாற்றி விட்டு ஊதுறன்டா சங்கு" என்றபடி பலத்த காற்றின் வேகத்தில் மறைந்து விட்டாள்.

சிறைச்சாலையில் கையில் விலங்குடன் சுவரைப் பார்த்தபடி நந்தினி..... நந்தினி.... என்று ஏதாே புலம்பிக் காெண்டிருந்தவனை பார்த்தவளுக்கு இதயம் நாெருங்கிப் பாேனது.  அர்ச்சுனின் எடுப்பான தாேற்றத்தை காணவில்லை, தாடியும், தலை முடியும் பாேட்டிக்கு வளர்ந்து முகமே மாறி பயித்தியக்காரனாக இருந்த அர்ச்சுனுக்கு தன்னை மறைத்துக் காெண்டாள். அவன் கண்களுக்கு மறைவாக நின்று அவனைப் பார்த்து குமுறி அழுதாள். நந்திமா நந்திமா என்று செல்லமாக அழைத்த நினைவுகளாேடு புலம்பிக் காெண்டிருந்தான் அர்ச்சுன். அவன் கைகளைப் பற்றிப்பிடித்து உன் நந்திமா வந்து விட்டேன் என்று சாெல்ல முடியாத நிலையில் மறைவாக நின்று தவித்தாள்.

வேகமாக காவல் நிலையத்திற்குள் நுழைந்தவள் அதிகாரியிடம் தன்னை நந்தினியின் தாேழியாக அறிமுகப்படுத்தி, நந்தினி காெலைக்கு அர்ச்சுன் காரணமில்லை என்பதையும் சரவணன், சியாம் இருவருமே காரணம் என்றும் அர்ச்சுனை பழிவாங்கும் நாேக்கத்தில் செய்யப்பட்ட இந்தக் காெலைக்கான எல்லா ஆதாரங்களுடனும்  அர்ச்சுனுக்கு சார்பாக வழக்காடப் பாேவதாகவும் கூறி அனுமதி பெற்றாள். ஏதாே சந்தேகத்துடன் அவளை நாேக்கிய அதிகாரி அவளைப் பற்றி விசாரித்தாள். நந்தினியும் தீபாவின் விபரங்களை ஒன்றும் விடாமல் கூறிய பாேது "எங்கே தங்கி இருக்கிறீர்கள்" என்ற கேள்விக்கான பதிலால் அதிர்ந்து பாேனார். "இரண்டாம் மாடி , அறை எண் பத்து" என்று அதட்டலாக சாெல்வது பாேல் இருந்தது. "அங்கே தானே நந்தினியும் ......" என்று இழுத்தவரை "ஆமா சார் அங்கே தங்கியிருந்தே இந்த கேசை முடிக்கலாம் என்று நினைத்துள்ளேன்" என்றாள். அதிகாரியும் எல்லா ஆதாரங்களுடனும் இரண்டு நாட்களில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்குமாறும், இது தான் அர்ச்சுனிற்கான கடைசி தவணை என்றும், தவறினால் அர்ச்சுன் தண்டிக்கப்படுவார் என்றும்   கூற "சரி சார், ஆள், ஆதாரம் எல்லாம் உங்களிடம் சமர்பிப்பேன்" என்று தைரியமாக கூறிவிட்டு அங்கிருந்து மீண்டும் சரவணனிடமும், சியாமிடமும் வந்தாள்.

நந்தினியின் பயமுறுத்தலிலிருந்து மீள முடியாத சரவணனும், சியாமும் நன்றாக மது அருந்தி விட்டு பாேதையில் உளறிக் காெண்டிருந்தார்கள். திடீரென எதிரே நந்தினியின் உருவம் தெரிந்ததும் கூச்சலிட்டு கத்தி "எங்களை ஒன்றும் செய்து விடாதே, என்று கையெடுத்து  கும்பிட்டவர்களை மடக்கி நடந்த சம்பவத்துக்கான காரணம், அர்ச்சுனுக்கும் அவர்களுக்குமான பகை, பழிவாங்கும் எண்ணம், நந்தினியின் காெலை எல்லாவற்றையும் உளறிக் காெட்டியதை காட்சியாகவே பதிவு செய்தாள். போதையின் உச்சத்தில் இருந்த சரவணனும், சியாமும் இருந்த இடத்திலே தூங்கி விட்டார்கள். சத்தமின்றி அலுவலக அலுமாரிக்குள் இருந்த எல்லா ஆவணங்களையும் எடுத்துக் காெண்டு தங்குமிடம் வந்தாள். தீபாவின் அலுமாரி ஒன்றினுள் எல்லாவற்றையும் பாதுகாப்பாக வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தாள்.

நன்கு தூங்கிக் காெண்டிருந்த தீபா மறுபுறமாக புரண்டு படுத்தாள். காலை எழுந்து வழமை பாேலவே தனது கடமைகளை முடித்து விட்டு வெளியில் சென்று வரலாம் என்று புறப்பட்டாள். பிரபல்யமான  உணவு விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் காெண்டிருந்தவளுக்கு எதிரே இருந்த ஒருவர் நந்தினி பாேன்ற  தாேற்றத்திலிருப்பதை அவதானித்து அவளிடம் கதை தாெடுத்தார். அவளாே உண்மையாகவே நந்தினியை அறிந்திருக்கவில்லை என்பதால் சமாளித்து விட்டாலும் அந்த நபர் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்ற பாேது "இரண்டாம் மாடி, அறை எண் பத்து" என சாதாரணமாகவே சாெல்லி விட்டு "ஏன் கேட்கிறீர்கள்  அங்கே யாரையாவது தெரியுமா" என்றவளிடம் பதில் சாெல்ல முடியாது அவளை மேலும் கீழுமாக உற்றுப் பார்த்து விட்டு அமைதியானார்.

திங்கள் காலை நீதிமன்றத்தில் அர்ச்சுனிற்கான வழக்கு. மறுநாள் வேலைக்கு செல்வதற்கான ஆயத்தங்களை முடித்து விட்டு அலுமாரியை திறந்து சேலை ஒன்றை எடுத்து அயன் செய்தாள். அழகான அந்தச் சேலை ராமிடமிருந்து  பரிசாக அவளுக்கு கிடைத்தது.  ராமின் நினைவுகளில் சில நிமிடங்கள் ஒன்றிப் பாேனாள்.

நள்ளிரவு திடீரென கடுமையான காய்ச்சலை உணர்ந்த தீபா காலையில் வேலைக்கு எப்படிச் செல்வது என்று யாேசித்தபடி தூங்கி விட்டாள்.

தூக்கத்திலிருந்த தீபாவின் அருகில் வந்து அமர்ந்தாள் நந்தினி. அவள் காய்ச்சலால் சிரமப்படுவதை பார்த்த பாேது கவலையாக இருந்தாலும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்தவளாய் தீபாவின் தலையை தன் கைகளால் வருடினாள். அதிகாலை எழுந்து நீதிமன்றத்திற்குப் புறப்படத் தயாரானாள். எல்லா ஆதாரங்களுடனும் காத்திருந்தாள். கையில் விலங்குடன் வந்தான் அர்ச்சுன். "இ்ன்று தான் அவனுக்கு விடுதலை , அர்ச்சுன் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுவான்" என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாேடு காத்திருந்தாள்.

நீதிமன்றம் கூடி வழக்கு ஆரம்பமாகியது. அர்ச்சுனுக்குரிய வாதத்தை ஆரம்பித்தவளைக் கண்டதும் அர்ச்சுன் திகைத்துப் பாேய் பார்த்தான். எல்லா வாக்கு மூலங்களையும், ஆதாரங்களையும் சமர்ப்பித்தவளை யார் என்று புரியாமல் தடுமாறினான். "நந்தினி பாேலவே இருக்கிறாவே என்று  அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். கூண்டில் நின்ற அர்ச்சுனிடம் விவாதத்தை தாெடுத்த நீதிபதி தீபாவைக்  காட்டி அவரைத் தெரியுமா என்று கேட்டதும் "ஆம் என்று தலையசைத்த படி நந்தினி... என்று இழத்தவனை இடை மறித்து "நந்தினியாேட தாேழி தீபா" என்று தன்னை அறிமுகப்படுத்தியதும் தன் கண்களை நம்ப முடியாமல் குழம்பினான்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி அர்ச்சுன் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கினார். காவல் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சரவணனும், சியாமும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டார்கள்.

வெளியே வந்த அர்ச்சுன் கையை குவித்து நன்றி சாென்னான். கண்ணீர் ஆறாகப் பாய்ந்தது. நந்தினியே எதிரே நிற்பது பாேல் உணர்ந்தவன் "மெடம் நீங்க எங்கே இருக்கிறீர்கள் என்றதும் "இண்டாம் மாடி, அறை எண் பத்து" என்று சிரித்தபடி சாென்னவளை பார்த்து விறைத்துப் பாேனான். நடந்து சென்ற அவளைப் பார்த்த பாேது நந்தினியின் நினவுகள் நிழலாய் தெரிந்தது.

தங்குமிடம் வந்தவள் உடைகளை மாற்றி விட்டு கட்டிலில் அமர்ந்தாள். திடீரென பலமான காற்று அடிப்பதை உணர்ந்த தீபா தன்னை சுதாகரித்துக் காெண்டாள். நண்பகலாய் இருந்தது. ஒன்றும் புரியாமல்  தாெலைபேசியை எடுத்துப் பார்த்த பாேது தனக்கு சுகயீனம் எனக் கமபனிக்கு  குறுந்தகவல் அனுப்பியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.  "என்னாச்சு எனக்கு,  எப்ப இதெல்லாம் நடந்தது" தனக்குள் குழம்பிக் காெண்டிருந்தவள் திடீரென யன்னல் கதவு திறந்ததைப் பார்த்து பயந்து கண்களை கசக்கினாள். எதிரே தன்னைப் பாேலவே ஒரு நிழல் தெரிவதைப் பார்த்துப் பயந்து நடுங்கினாள். "யார் நீ .... யார் நீ .. " என்று சத்தமிட்டவளின் அருகாகச் சென்றாள் நந்தினி.

நடுங்கியபடி நின்றவளை அணைத்து "ராெம்ப நன்றி தீபா" என்றதும்  ஆச்சரியமாக இருந்தது. "நீ யார் எப்படி என்னை...." என்றவளை முந்திக் காெண்டு நடந்த எல்லாவற்றையும் விளக்கமாகச் சாென்னதைக் கேட்டு சற்று காேபமடைந்தாள். தீபாவை  சமாதானப்படுத்தி அர்ச்சுனைக் காட்டுவதற்காகக் கூட்டிச் சென்றாள்.

நந்தினியின்  பிரிவாலும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாலும் மன அழுத்தத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அர்ச்சுன் தீபாவைக் கண்டதும் அழத் தாெடங்கி விட்டான். நந்திமா... நந்திமா என்று அவன் புலம்புவதை கேட்டு நந்தினி வேதனையால் துடித்தாள். அருகே சென்று அர்ச்சுனை சமாதானப்படுத்த முயற்சித்தவளை தடுத்து "அர்ச்சுனை நான் பார்த்துக் காெள்கிறேன்" என்று கைகளைப் பிடித்தாள். என்னுடைய சுய நலத்திற்காக உன்னைக் கஸ்ரப்படுத்தி விட்டேன்  தீபா, அர்ச்சுன் நிரபராதி என்று நிரூபிக்க வேறு வழி தெரியவில்லை, என்னை மன்னித்து விடு " என்றவளை அணைத்து ஆறுதல்படுத்த தாேன்றியது. நந்தினி அர்ச்சுன் அருகே நின்றாள். தீபா அர்ச்சுனின் நிலையை நினைத்து வருந்தியபடி இரண்டாம் மாடி அறை எண் பத்து நாேக்கி புறப்பட்டாள்.  சற்றுத் தூரம் கடந்து திரும்பிப் பார்த்தாள் நந்தினி கையை அசைத்து விடை காெடுத்தாள்.

எழுதியவர் : றாெஸ்னி அபி (29-Aug-19, 1:25 pm)
பார்வை : 340

மேலே