கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 6

குமார்: பாப்பா யூ ஓகே?

சுஜி அதிர்ச்சியின் விளிம்பிலிருந்து சுதாகரித்தாள்.

சுஜி: யா..யா... ஐ எம் ஓகே.

குமார், அக்கீரை பார்த்துக் கேட்டான்.

குமார்: எஸ் புரோ.. எனிதிங்?

சுஜி உடனே இடைமறித்தாள்.

சுஜி: குமார், மீட் மிஸ்டர் அக்கீர். மை ஆபிஸ் கோலிக்.

குமார்: ஹாய், ஐ எம் குமார். சுஜி'ஸ் ஹஸ்பண்ட்.

அக்கீர்: ஹாய்... நைஸ் டு மீட் யூ.

குமார்: இங்க எங்க இந்த நேரத்துல...

அக்கீர்: மணி அஞ்சறை புரோ... ஜாகிங் வந்தேன். சுஜி கார் பார்த்தேன். எதோ புரொபலம் நெனச்சேன் அதான் வந்தேன்.

குமார்: உங்க கார்?

அக்கீர்: தோ, அங்க... சரி புரோ ஐ மேக் எ மூவ். பாய் சுஜி.

சுஜியும் அக்கீரை பார்த்து சரி என்று தலை அசைத்தாள். குமாருடன் வீட்டிற்கு கிளம்பினாள் சுஜி.

குளித்து முடித்து ஆபிஸ்க்கு கிளம்பிக் கொண்டிருந்தவளை பார்த்து கேட்டான் குமார்.

குமார்: அந்த அக்கீர் யாரு? இதுவரைக்கும் நான் உங்க ஆபிஸ்ல பார்த்ததே இல்லையே?

சுஜி:அக்கீர் இங்க உள்ள ஸ்டாப் கிடையாது. புரொஜெக் பேஸ். இப்போதைக்கு ஜோர்டான் புரொஜெக் பேச்சு வார்த்தை அடிபடுது. மேய் பி, அக்கீர் அங்க போகலாம்.

குமார் சுஜியையே பார்த்தான்.

சுஜி: என்ன ?

குமார்: இல்ல... அவன் பார்வையே சரி இல்ல. பார்த்து இரு.

சுஜிக்கு சிரிப்பு வந்தது.

குமார்: ஏன் சிரிக்கறே?

சுஜி: எப்போ முக ஜோசியம்லா பார்க்க ஆரம்பிச்சே?

குமார் அவளுக்கு பதில் சொல்லும் முன் அவனுக்கு அவனது ஆபிசிலிருந்து கால் வந்தது. அதனால், சுஜி அவனுக்கு டாடா சொல்லி விட்டு வேலைக்கு பறந்து சென்றாள். வேலைக்கு பறந்தாள்
என்பதை விட அக்கீரை பார்க்க விரைந்தாள் எனலாம். அவனை பார்த்தால் மட்டுமே அவளுக்கு அன்றைய பொழுது ஆபிசில் கழியும். எல்லாம் காதல் மயக்கம் தான்.

ஆபிசில் சுஜியும் அக்கீரும் நெருக்கமாக பழக மாட்டார்கள். ஆபிசுக்கு வந்தவள் அக்கீரை தேடினாள். பிறகுதான் தெரிந்தது அவன் மீட்டிங் சென்று விட்டான் என்று. இன்று ஒரு நாள் முழுக்க ஆபிசுக்கு வர மாட்டான் என்று அவளது ஸ்டாப் சொன்னதும்; சுஜிக்கு உலகம் நின்றது.

ஆமாம், காதல். எல்லாம் காதல் செய்யும் பாடு.காதலுக்கு கண் மட்டும் இல்லை. நேரம் காலம் கூட இல்லை. எதுவுமே இல்லை எனலாம். அதனால் தான், அவனை ஒரு நாள் பார்க்க முடியவில்லை என்பது சுஜிக்கு சுனாமியின் தாக்குதலில் சிக்குண்டது போல் இருந்தது.

அக்கீருக்கு வழக்கம் போல் வட்ஸ் ஆப் அனுப்பி விட்டு வேலைகளில் மூழ்கினாள். இருந்தும் வேலை ஓடவில்லை. அவனும் அவளும் எடுத்த புகைப்படங்களை பார்த்தாள். அவனும் அவளும் பேசிக் கொண்ட வட்ஸ் ஆப் குரல் பதிவுகளை மீண்டும் மீண்டும் கேட்டாள். அவன் சொன்ன அந்த 'ஐ லவ் யூ டி லூசு' ஒரு நாளைக்கி 1௦௦ தடவைக்கு மேல் கேட்டாலும் அவளுக்கு சலிக்காது.

சுஜிக்கு தெரியும் எப்படியும் அழைத்தால் எடுக்க மாட்டான். மீட்டிங் சென்றால் வழக்கமாக அவன் அப்படித்தான் செய்வான். அது சுஜிக்கு நன்றாக தெரியும். இருந்தும் அவளுக்குத்தான் தாங்கவில்லை அவனின் பால் ஏக்கம். அனுப்பி வைத்தால் முப்பது நாற்பது வைஸ் நோட்ஸ்.

அக்கீர் ஏற்கனவே சுஜியிடம் அவனது வீட்டு சாவி ஒன்றினை அவளிடம் கொடுத்து வைத்திருந்தான். இன்று என்ன நடந்தாலும் சரி எத்தனை மணி ஆனாலும் சரி அக்கீரை பார்க்காமல் வீடு திரும்ப கூடாது என தீர்மானித்தாள்.

குமாரை அழைத்து, ஆபிசில் வேலை அதிகம் நானே வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு; காரை எடுத்துக் கொண்டு அக்கீரின் வீட்டிற்கு சென்றாள் மாலை மணி ஐந்துக்கு. காரை ஓட்டிக் கொண்டே அவளது வட்ஸ் ஆப்பை பார்த்தாள். அவள் அனுப்பி இருந்த அத்தனை வய்ஸ் நோட்ஸும் அக்கீருக்கு கிடைத்தாயிற்று. அப்படி என்றால் அவனுக்கு மீட்டிங் முடிந்து விட்டது.

உடனே அவனுக்கு அழைத்தாள். ஆனால், அவனது அழைப்பு கிடைக்கவில்லை. அவன் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறான். சுஜிக்கு கண்ணெல்லாம் கலங்கி கண்ணீர் வந்து விட்டது. வட்ஸ் ஆப் தட்டி வைஸ் நோட் ரெக்கோட் செய்தாள்,

சுஜி: நான் ஒருத்தி இங்க பைத்தியக்காரி மாறி நீ எப்போ கால் பண்ணுவேன்னு வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்; நீ என்னான்னா யார்கிட்டையோ பேசிகிட்டு இருக்கே. போடா போ உனக்கு உங்க ஊர் பாத்திமா பேகம் தான் லாக்கி.. இந்த மலேசியா சுஜிலாம் உனக்கு செட்டே ஆகா மாட்டேன்.

சொல்லி விட்டு கண்களை துடைத்துக் கொண்டாள்.

அக்கீரின் வீட்டிற்குள் நுழையும் முன்பே தெரிந்து விட்டது சுஜிக்கு அவன் வீட்டில் தான் இருக்கிறான் என்றான்.

அவனின் குரல் நன்றாகவே அவளுக்கு கேட்டது. குரல் மட்டுமே கேட்கிறதே ஆனால், ஆளை காணோமே. சுஜி கண்களை அலைய விட்டாள். பூனை குட்டி போல் பதுங்கி பதுங்கி வீட்டினுள் அடி எடுத்து வைத்தாள். அவளது ஹேண்ட் பேக்கை எதிரே இருந்த சோபாவில் வைத்து விட்டு, பால்கனியை எட்டி பார்த்தாள். ஆளைக் காணோம். எங்கே இவன் குரல் மட்டும் கேட்கிறதே என்று மீண்டும் திரும்பி திரும்பி அங்கேயும் இங்கேயும் பார்த்து அவனை தேடினாள்.

சுஜி தனக்குத்தானே கேள்வியும் கேட்டு கொண்டாள்.

சுஜி: ஒரு வேளை, அந்த கவியோ? கால் பண்ணிருப்பாளோ? அவ கிட்டத்தான் இவ்வளவு நேரம் பேசறானா? என்னை மறந்துட்டு....

சுஜி ஒரு பைத்தியக்காரி. அக்கீரின் பார்வை அவள் மீது மட்டுமே இருக்க வேண்டும். இல்லை என்றால் பித்து பிடித்து அவனையும் பைத்தியக்காரனாக்கி விடுவாள். அதைத்தான் இப்போதும் செய்ய பார்க்கிறாள். அக்கீர் யாருடன் பேசுகிறான் என்றே தெரியவில்லை.

அதற்குள் ஒரு கற்பனையை இவளே உருவாக்கி கொண்டு கண்களை குளமாக்கி கொண்டாள். இவளுக்கு இதே பிழைப்பு. அழுவதை தவிர வேறு ஏதும் தெரியுமா என்றுக் கூட நமக்கே எரிச்சலாகி விடும் சில வேளைகளில். என்ன செய்வது இவள் செய்வது இப்படித்தானே இருக்கிறது.

அக்கீரை தேடித் கொண்டே சென்றாள். அவன் படுக்கை அறையிலிருந்து குரல் கேட்டது. அங்கே விரைந்தாள். இருந்தும் அவனை காணோம். எங்கதான் இருக்கான் இவன்.

தேடித் கொண்டிருந்தவளின் கன்னத்தில் தீடிரென ஒரு முத்தம். பின்னாலிருந்து வந்து, சத்தமான முத்தம் ஒன்றை வைத்து அவளைத் தாண்டி பால்கனிக்கு சென்றான். அவன் கையில் இன்னும் போன் இருக்கிறது. வீடியோ கால். வேணி சேச்சியுடன். கண்டு பிடித்து விட்டாள். இப்பொழுது அவளுக்கு நிம்மதி.

ஆனால், வேணி சேச்சிக்கு நிம்மதியே இல்லை காரணம் அவளுக்கு சுஜியை பிடிக்கவே பிடிக்காது. அக்கீர் சுஜியை பற்றி அவளிடம் தனக்கு இருக்கும் காதலை பற்றி வேணி சேச்சியிடம் சொன்ன போது எல்லாம் சுக்கு நூறாய் போனது.

அன்றிலிருந்து இன்றுவரை வேணி சேச்சியிடம் அக்கீர் சுஜியின் பேச்சை எடுப்பதே இல்லை. ஆனாலும், வேணி விடுவதே இல்லை. எப்போது அழைத்தாலும் சுஜியை காரித் துப்பும் வசைபாடல் தொடரும். அதனாலேயே, இப்போதெல்லாம் அக்கீர் வேணி சேச்சியை அழைப்பது குறைந்தது.

வேணி சேச்சி என்றுதான் அக்கீர் அவளை அழைப்பான். அவள் கேரளாவில் இருக்கிறாள். ஒன்றாக படித்தவர்கள். அக்கீருக்கு அவளை பார்க்கும் போது அவன் அம்மாவையே சின்ன வயதில் பார்த்தது போல் தோன்றும் அதனாலேயே வேணியை, சேச்சி என்று அழைப்பான். அம்மா என்று அழைத்தாள் அடி விழுமே.

வேணி நல்லவள் தான். இருந்தும் அவளுக்கு சுஜி மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. அது சுஜிக்கே தெரியும். பால்கனியில் நின்று வேணி சேச்சியுடன் பேசிக் கொண்டிருந்த அக்கீர் பறந்து விரிந்த வானை பார்க்காமல் சுஜியை பார்த்தவாறுதான் பேசிக் கொண்டிருந்தான்.

கைகளைக் கட்டி கொண்டு பால்கனியில் நின்று வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த அக்கீரை அவளும் பார்த்தாள்.

சுஜி: வேணிகிட்ட பேசிகிட்டே கிஸ் அடிக்கிறான். என்ன தைரியம் இவனுக்கு. வர வர ரொம்பதான் கொழுப்பு இந்த அட்லசுக்கு. பிடிச்சி வெளுத்து விடணும் இவனே.

பார்த்தவளை கண்ணடித்து தண்ணி வேண்டும் என சைகை வழி கேட்டு மீண்டும் வீடியோ காலில் வேணியிடம் பேச ஆரம்பித்தான் அக்கீர்.

சுஜி: என்கிட்ட பேச முடியல போய்டான் சேச்சி சோசின்னு.. கடுப்பாக்கிகிட்டு...

சுஜி முனகி கொண்டே சமையலறை பக்கம் சென்றாள். இருவருக்கும் தேநீர் கலக்கி கொண்டு வந்து அவனிடம் ஒரு கப்பை நீட்டினாள். எதிரே இருந்த அசைந்தாடும் நாற்காலியில் அமர்ந்தாள். முன்னும் பின்னும் அசைந்தாடினாள்.

அவள் அணிந்திருந்த சுடியின் துப்பட்டா தரையில் பட்டு முழுதாய் அவள் கழுத்திலிருந்து கீழே விழ முற்பட்ட போது, பேசிக்கொண்டிருந்த அக்கீர் திடீரென விருட்டென திரும்பி துப்பட்டாவை கையில் எடுத்து அவள் கழுத்தில் அதை சரியாக போட்டு விட்டான்.

சுஜி, அவனையே பார்த்தாள். யோசித்தாள்.

சுஜி:அப்படி திரும்பி பேசிக் கிட்டு இருந்தான். அப்பறம் எப்படி என் துப்பட்டா விழ போதுனு தெரியும்... எப்படி பிடிச்சான்..

யோசித்துக் கொண்டே கை கடிகாரத்தை பார்த்தவள் கையிலிருந்த தேநீரை பருகினாள். அவளது காலை தூக்கி எதிரே அக்கீர் அமர்ந்திருந்த நாற்காலியின் பக்கம் இருந்த இன்னொரு நாற்காலியில் வைத்தாள்.

வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த அக்கீர் ஒரு கரத்தால் அவளது காலை பற்றினான். அவளின் பாத விரல்களை மெல்ல வருடினான். சுஜி அவனை பார்த்துக் கொண்டே நமட்டு சிரிப்பு சிரித்தாள். அவன் கைகளில் தன் கால் விரல்களை சிக்க விடாமல் அங்கும் இங்கும் அசைத்து அசைத்து விளையாடினாள்.

அக்கீரும் பேசிக் கொண்டே அவள் பாதத்தை பிடித்தான் ஒரு பிடியாக. கண்களை மூடிக் கொண்டு அசைந்தாடும் நாற்காலியை அசைக்காமல் இருந்தாள் சுஜி. அவனின் இறுக்கமான பிடி மென்மையான வருடலானது. தலையை பின் பக்கம் சாய்த்துக் கொண்டாள். வருலடல்களில் திளைத்தாள் சுஜி.

அக்கீர் வேணியிடமிருந்து விடை பெற முற்பட்ட போது,

வேணி சேச்சி: என்னடா, போன் வெக்கறதுலையே இருக்க? ஏன் அவ கால் பண்றாளா?

இல்லை என்று தலை ஆட்டிய அக்கீர் மெதுவாய் முனகினான்,

அக்கீர்: அவ எங்க கால் பண்றா? கண்ணு முன்னுக்குல வந்து ஒக்காந்து இருக்கறா.

வேணி சேச்சி: நான் சொல்லிட்டேன் அட்லஸ், தேவ இல்லாம பிரச்சனையில் மாட்டிக்காத! ஊர் விட்டு ஊர் போய் போன வேலைய மட்டும் பாரு. அவளை பார்த்துகிட்டு மத்ததெல்லாம் கோட்டை விட்றாத! புரியுதா?

அக்கீர்:ஹ்ம்ம்..

வேணி சேச்சி: அவ கிட்ட பேசறத முதல்ல நிறுத்து. அவ நல்லவளே கிடையாது. உடம்பு முழுக்க விஷேம். எல்லாம் வேஷம். எப்படி கல்யாணம் ஆனா ஒரு பொம்பளைக்கு இன்னொரு ஆம்பளை மேல காதல்? கேட்கவே அருவருப்பான இல்ல? அசிங்கம் பிடிச்சவ, அசிங்கம் பிடிச்சவ. அவ நடிக்கராடா! உன்ன ஏமாத்தறா! பொம்பளையா அவ? அவளுக்கெல்லாம் நீ ஒண்ணுமே இல்லே, இன்னிக்கி நீ! நேத்து யாரோ? நாளைக்கி யாரோ...

வேணி சேச்சி, சுஜியை கண்மண் தெரியாமல் கரித்துக் கொட்டினாள். பொறுமை இழந்த அக்கீர், காதிலிருந்து ஹேன்ஸ் பிரியை கழட்டி வேகமாக வீசி எறிந்தான். வேணி பேசுவது இப்போது சுஜிக்கும் கேட்டது.

வேணி சேச்சி: துரைக்கு கோவம் வருதா? வரட்டும் நல்ல வரட்டும். நீ தப்பு பண்ற அட்லஸ். உனக்கு அது தெரியுதா இல்லையா? புருஷன விட்டுட்டு உன்கிட்ட வரான அவ எந்த மாதிரி ...

வேணி சேச்சி முடிக்கும் முன் ஆத்திரத்தில் போனை தூக்கி விசிறி அடித்தான் அக்கீர். போன் நாளா பக்கமும் சிதறியது. ஆத்திரம் தாங்காது பால்கனியின் கம்பிகளை வேகமாக கைகளை மடக்கி பலமுறை குத்தினான் அக்கீர்.

சுஜி வேகமாக எழுந்து அக்கீரின் கைகளை பிடித்துக் கொண்டாள். கைமுட்டிகள் வீக்கத்தில் புடைத்துக் கொண்டன. அக்கீரின் கண்கள் கலங்கியிருந்தன. அவன் கைகளை தேய்த்தவள்; அவன் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டு அவனை அப்படியே கட்டி கொண்டாள். இருவரும் ஏறக்குறைய 10 நிமிடங்கள் அப்படியே நின்றனர். வானம் இருட்டியது.

சுஜி அக்கீரின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். கீழே சிதறியிருந்த கைத்தொலைபேசியை பாகங்களை ஒவ்வொன்றாய் தேடி தேடி பொறுக்கி எடுத்தாள். நல்ல வேளை ஏதும் உடையவில்லை. பாகங்கள் மட்டும் கழண்டிக்கொண்டன. அவைகளை சுஜி மீண்டும் பொருத்தினாள். பொருத்திய கைத்தொலைபேசியை எதிரே இருந்த மேஜை மீது வைத்தாள்.

அக்கீரின் கோபம் இன்னும் தணியவில்லை. முகத்தில் ஈயாடவில்லை. இறுக்கமாகவே இருந்தது. சுஜி அவனை பின்னாலிருந்து கட்டிக் கொண்டாள். அவளது இரு கரங்களை, அவன் நெஞ்சில் வைத்து இறுக்கிக் கொண்டாள். அவன் தோள்பட்டையில் சாய்ந்தவாறு முத்தம் தந்தாள். அக்கீர் அவளின் பக்கம் திரும்பி பார்த்தான். சிரித்துக் கொண்டு,

அக்கீர்: என்னடி?

சுஜி: என் டீ ஆறி போச்சி...

கவலையான குரலில் கொஞ்சலோடு சொன்னாள். அக்கீர் அதிர்ச்சியாகியதுப் போல் பாசாங்கு செய்து வாயில் கை வைத்து பொத்திக் கொண்டான். சிரித்துக் கொண்டே கேட்டான்.

அக்கீர்: ஆறி போச்சா? பாவம் என் சுஜி குட்டி. கஸ்த்தப்பட்டு டீ போட்டா.

பேசிக் கொண்டே அந்த பால்கனி கம்பிகளில் ஏறி ஒருக்களித்து உட்கார்ந்துக் கொண்டான். சுஜி அவன் இருக் கால்களுக்கு இடையில் நின்றுக் கொண்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுஜி: டீ சூடாக்கி தரவா?

வேண்டாம் என்று தலையாட்டியவன். அவளையே பார்த்தான். அவள் கூந்தல்களை வருடினான். அந்தி சாயும் அதே வேளையில் சூரியனின் கதிர் வீச்சுகள் அவள் முகத்தில் படர்ந்தன. வானம் மழைக்கான அறிகுறியே இன்றி மழைத் தூறல்கள் போட்டன. சூரிய வெளிச்சத்தோடு சேர்ந்த மழை தூறல்களால் கண்களை சிமிட்டினாள் அவன் காதலி சுஜி.

சுஜி: என்னடா அட்லஸ் வெச்ச கண்ணு வாங்காம பார்க்கற?

அக்கீர்: உன் மூக்குத்தி செம்ம அழகா இருக்கு. இந்த முடி. இந்த லிப்ஸ். கியூட்டா... லைட்டா சிரிக்கிற உன் ஸ்மைல். நீ கட்டிருக்கற இந்த வாட்ச். உன் கை. அதிலிருக்கற இந்த நெய்ல்ஸ். இந்த கண்ணு. இந்த கண்ணுக்கு நடுவுலே இருக்கற உன் கருவிழி. இப்போ, நீ குடுக்கறே இந்த லுக். வாவ்... எல்லாத்துக்கும் மேல நீ வெச்சிருக்கிற இந்த பொட்டு.

அக்கீர் தன்னை வர்ணிப்பது சுஜிக்கு வெட்கத்தோடு சேர்த்து அவன் மேல் கொண்ட காதலையும் அதிகப்படுத்தியது. காதல் ததும்ப அவன் முழங்கைகளை பற்றிக் கொண்டு சொன்னாள் சுஜி, அவன் கண்களை பார்த்து

சுஜி: ஐ லவ் யூ அட்லஸ்...

அக்கீர்: உன்ன அணு அணுவா லவ் பண்ணனும்டி...

அக்கீர்:

அந்தி சாயும் நேரம்
தூரல் மழை
இரு கப் தேநீர்
இறுக்கி அணைத்தபடி நீ
நிறைய காதல்
கொஞ்சூண்டு வெட்கம்
வேறு என்னடீ வேணும் எனக்கு...

சுஜி எக்கி அக்கீரின் தலையில் முட்டினாள். அவன் கைகளை பிடித்து வெளியில் போகலாம் என்றாள். எங்கே என்று கேட்டவனிடம் ஷர்ப்ரைஸ் என்றாள்.

இருவரும் காரில் பயணித்தனர். சுஜிதான் காரை செலுத்தினாள்.

அக்கீர்: சோரிடி பாப்பா.

சுஜி: ஏன்?

அக்கீர்: வேணி சேச்சி...

சுஜி: அக்கீர், வேணி பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவுங்களுக்கு உன் மேல அக்கறைடா. அதான். என் மேல கோவம். நான் உன் வாழ்க்கையை வீணாக்கறேன். அதான் என் மேல கோவம். அவ்ளோதான்.

அக்கீர்: 26 தேதி வேணிக்கு பிறந்தநாள். பேச முடியல. அதான் இன்னிக்கி பேசினேன். அவ என்னான்னா உன்ன போய்....

சுஜி: சரி விடு.வேணி பத்திதான் தெரியுமே. அவளுக்கு உன் மேலே பாசம் ஜாஸ்திடா. உனக்கு இன்னொரு அம்மா அவ.

அக்கீர்: அப்போ நீ?

அக்கீர் இடது கையை காரின் ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கொண்டு அவளை பார்த்துக் கேட்டதில் சுஜி செலுத்திய வாகனத்தின் வேகம் குறைந்து மெதுவாய் நகர்ந்தது. வினாடி அமைதியும் நிலவியது.

கார் சாதாரண சாலையை தாண்டி சுரங்க பாதையில் நுழைந்தது. ஏறக்குறைய இருபது நிமிட சுரங்கப் பாதை வழி அது.

சுஜியின் கைப்பேசி சத்தமின்றி அதிர்ந்தது. அவள் கணவன் குமார் அழைத்தான். இதுவரை போனை அதிர்வில் வைத்திருந்தவள் இப்போது போனை முழுதாய் சத்தமின்றி மாற்றி விட்டாள்.

அக்கீர்: சுஜி, வா நான் உன்ன வீட்டுல விடறேன்.

சுஜி: இப்போ ஏன்?

அக்கீர்: பாவம்டி அந்த மனுஷன். திரும்ப திரும்ப நாம பண்ற தப்ப நியாய படுத்த வேணாம்! தப்பு பண்றோம்! பண்றோம்! பண்ணிக்கிட்டே
இருக்கோம்! இது சரி இல்ல! நிறுத்தணும்!நிறுத்தியே ஆகணும்!

சுஜி: அட்லஸ் பிளீஸ்...

இப்போது அக்கீரின் கைத்தொலைபேசி அலறியது. அழைத்து கவி.

அக்கீர்: இவ வேற...

சுஜி காரை வேகமா பிரேக் வைத்து நிறுத்தினாள். அக்கீரையே பார்த்தாள். முறைத்து பார்த்தாள்.

அக்கீர்: வாட்...

சிரித்துக் கொண்டே கேட்டவனிடம்,

சுஜி: பேச வேண்டியதுதானே? கவிக்கிட்ட...

அக்கீர்: என்னடி பிரச்னை உனக்கு ?

மீண்டும் சிரித்தவாறே கேட்டான்.

சுஜி: எனக்கா? பிரச்சனையா? எனக்கென்ன பிரச்சனை? நீங்க ரெண்டு பேரும் பேசறதுக்கு நான் ஏன் நந்தி மாதிரி குறுக்கே இருக்கனும். அதான் பேச சொன்னேன். ஓ... ஓ...இப்போதான் எனக்கு புரியுது. நான் இருக்கும் போது எப்படி கவிகிட்ட பேச முடியும். அப்பறம் அவ கொச்சிக்குவா. அதானே? இல்ல நான் இருக்கறதுனால சங்கோஜமா இருக்கா மிஸ்டர் அட்லஸ்?

கோபத்தை வெளிகாட்டிடாமல் கூலாக இருப்பதாக காட்டிக் கொண்டு அக்கீரிடம் அவள் பேசிய விதம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

அக்கீர் இடது முழங்கையை காரின் ஜன்னலில் ஊன்றி கையை தலையில் வைத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி அவளையே புன்னகைத்தவாறே பார்த்தான்.

சுஜி: என்ன...

சுஜிக்கு அவனை அப்படி பார்க்கவே முடியாது. ஒரு மாதிரியான கிரகத்திற்கு தள்ளப்படுவாள். அது அவனுக்கும் தெரியும். இருந்தும் வேண்டுமென்றே அவளை அவன் பார்ப்பது சுஜிக்கு, அக்கீரின் முகத்திலேயே குத்த வேண்டும் என்று இருந்தது.

சுஜி: டேய், என்னடா? அவ கிட்ட பேச சொன்னா? என்ன பார்த்துகிட்டு இருக்கே? என் மூஞ்சில என்ன படமா ஓடுது?

சுஜி பாட்டுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் கேட்டாலும் அக்கீர் அதை எதையும் காதில் வாங்கி கொள்ளவில்லை. அவளையே புன்னகைத்துப் பார்த்தான். பார்த்தான் என்பதை விட ரசித்தான், ரசித்துக் கொண்டே அவளையும் கிறங்க வைத்தான் எனலாம்.

சுஜி, அவனின் புன்னகையின் மயக்கம் தங்காமல் காரிலிருந்து கீழே இறங்கி சுரங்கப் பாதையின் ஓரத்தில் இருக்கும் நடைபாதையை ஒட்டிய சாலை வழி ஓரத்தில் சாய்ந்துக் கொண்டாள். இப்போதும் அவன் எதிரே.

அக்கீர் காரின் உள்ளேயே அமர்ந்துக் கொண்டான். அவன் இறங்கவே இல்லை. இருந்தும் இடது பக்கம் திரும்பி காரின் ஜன்னலை இறக்கி தன் இருக் கைகளையும் கட்டி கொண்டு முகத்தை அதன் மீது வைத்து மீண்டும் அவளை புன்னகைத்துக் கொண்டே பார்த்தான்.

சுஜிக்கு வெட்கம் வந்தது. அவளது சுடியின் துப்பட்டா அதனை உறுதி செய்தது. அதை தன் விரல்களால் இழுத்து பிடித்து சுருக்கி அப்பப்பா... என்ன பாடு படுகிறது அந்த துப்பட்டா. பாவம் வாய் இருந்திருந்தால் அழுதிருக்குமோ என்னமோ.

சுஜிக்கு சுடிதார், சேலை எல்லாம் அவ்வளவாக பிடிக்காது. அவளை பொறுத்த மட்டில் அவைகளை அணிவது மிகவும் கடினம். ஒரே கசகச என்றிருக்கும் என்பாள். ஆனால், அக்கீருக்கு சுடிதார் என்றாள் கொள்ளை விருப்பம். அவளை ஒருமுறை அணிய சொன்னான். அன்றிலிருந்து இன்று வரை சுஜி சுடிதார் மற்றும் சேலையை தவிர மற்ற ஆடைகள் அணிவது குறைந்தே போயிற்று.

சுஜி வெட்கத்தால் அக்கீரை பார்க்க முடியாமல் தலையை குனிந்து அவ்வப் போது ஓரக் கண்ணால் அவனை பார்த்தாள். அப்படி அவள் தலை குனியும் போதும் ஓரக் கண்ணால் பார்க்கும் போதும் அக்கீரும் வேண்டுமென்றே அவளை வம்பிழுப்பது போல அவன் தலையை குனித்து நிமிர்த்து அவளை பார்த்தான்.

சுஜி: டேய் அட்லஸ்.... ஏன்டா இப்படி பண்ற? சிரிக்காதடா பிளீஸ்...

கெஞ்சிவளை விடாமல் காதல் தொல்லை செய்தான் அக்கீர்.

சுஜி:போடா... நான் போறேன்...

சுஜி செல்லமாய் கோபித்துக் கொண்டு அங்கிருந்து கொஞ்ச தூரம் தள்ளி சென்று நின்றுக் கொண்டாள்.

ஒன்றிரெண்டு கார்கள் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் வந்து போயின. அதுவும் மின்னல் வேகத்தில். இவர்களை கண்டு கொள்ள யாருக்கும் ஆர்வமில்லை. ஆர்வம் இல்லை என்பதை விட நேரம் இல்லை. யாரும் இவர்களை நிறுத்தி நிதானமாக கேள்வி கேட்க போவதில்லை. என்ன, இருவரும் நடுரோட்டில் கொட்டம் அடிக்காமல் ஓரமாய் இருப்பது நன்று. யாருக்கும் தொல்லை தராத மட்டில்.

அக்கீர் காரிலிருந்து இறங்கி சுஜியின் இருக்கையின் பக்கம் சென்றான். காரின் ஜன்னல்களை ஏற்றி விட்டு, குளிர்சாதனத்தையும் கார் இன்ஜீனையும் அடைத்து விட்டு சாவியை கையில் வைத்து சுற்றிக் கொண்டே சுஜி நின்றிருந்த இடம் நோக்கி நடந்தான்.

நடக்கின்ற வேளையில் சோர்ந்திருந்த உடலை, தன் கைகளை மேலே தூக்கி நன்றாக நெளிவெடுத்து அவளை பார்த்தவாறே அவளிடத்தை அடைந்தான்.

நின்றிருந்த சுஜி அக்கீர் வருவதற்குள் அமர்ந்துக் கொண்டாள். அவன் அருகில் வந்து அமர்வான் என்றெண்ணி. அவளிடம் சென்றவன் அவள் பக்கம் அமரவில்லை. அவளை பார்க்கவில்லை. எதிரே இருந்த வெற்று சுவற்றை பார்த்தபடி சாய்ந்து நின்றான்; அந்த சுரங்க நடைப்பாதையில்.

சுஜியும் அவனை பார்க்கவில்லை. இப்போது இருவரும் எதிரே இருந்த வெற்று சுவரை, சுரங்க சுவரை பார்த்தனர்.

சத்தமின்றிய நீண்ட சுரங்கப் பாதை. மங்கிய மஞ்சள் நிற விளக்குகள். சுரங்கத்திற்கு அப்பால் தெரியும் ஜோவென்று பெய்யும் மழை. மிதமான குளிர். லேசான சூட்டுக்கு ஏங்கும் மனம். இல்லை இல்லை உடல்.

அக்கீர்:

விளக்கணைந்ததும்
பேதமின்றி ஒன்றாய்ப் போகிறது-
எல்லா பெண்ணுடலும்,

சுவற்றை பார்த்து சொன்னவன், இப்போது சுஜியை பார்க்காமலேயே அவள் கரங்களை பற்றுகிறான். இறுக்கமாக. சுஜி அக்கீரை பார்க்கிறாள் தலையை சாய்த்து. சிரித்துக் கொண்டே தொடர்கிறான்,

அக்கீர்:

ஆயினும்,

அவளிடத்தில் திரும்பி அவள் நெற்றியோடு அவன் நெற்றியை ஒட்டி மூக்கோடு மூக்கு உரசி, தேகமெல்லாம் சிலிர்க்க, அவர்கள் தேடிய அந்த உடல் சூடு மிதமாய் கிடைக்க, மூச்சிரைச்சலில் இதயத்தின் துடிப்பு பட பட வென வெளியில் கேட்ட அந்த கணம் சொல்லி முடித்தான்,

அக்கீர்:

என் தேவையென்னவோ
உன் மூச்சின் வெப்பங்கலந்த
தனி வாசனை மாத்திரமே...
இதைக் கண்மணியின் காதலென்றுரை!

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (28-Aug-19, 2:11 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 262

மேலே