நிழற்படம்



என் மௌனத்தின்
அர்த்தங்களே உன் பார்வைகளாய்
உன் விழி(கள்) பார்க்கும்
தூரங்களே என் வாழ்க்கைப்
பயணங்களாய்
கண்ணீரை என் விழிகள்
அறியும் முன்னே – துடைத்து விட
நீளும் உன் கரங்களே
கானலாய் போனது
இத்தனையும் ஓர்
இரவின் மௌனத்தைக் கிழித்து
கொண்டு விசும்பலாய் உன் குரல்
கேட்கும் துடைக்க முடியா
தூரத்தில் நான் உயிரில்லா
நிழற்படமாய்
உன் வீட்டு
சுவரில்.

எழுதியவர் : kathir@kathick (31-Jul-10, 3:41 pm)
சேர்த்தது : kathir
பார்வை : 494

மேலே