விநாயக சதுர்த்தி
நீயில்லா வீதி
உண்டா விநாயகா
உன்னைப் பார்க்க
பார்க்க
தோணும் கேள்வி
விநாயகா
என் கேள்விக்கு
பதில்
சொல்லேன் விநாயகா
தாயை காணவந்த
தனயனை
ஏன் தடுத்து
தலை இழந்தாய்
விநாயகா
தந்தைசொல் மந்திரம்
இது தெரியாதா
விநாயகா
தாயால் மீண்டும்
விநாயகா
மறுப்பிறவி நீ பெற்றாய்
விநாயகா
சாதுர்யமாய் பேசி
ஏமாற்றி
ஞானப்பழம் அடைந்த
விநாயகா
ஏமாற்றும் சூழ்ச்சியை
எங்கு
கற்றாய் விநாயகா
நீ எழுதிய மகாபாரத
சகுனியின்
சூழ்ச்சி இதை தழுவியதோ
விநாயகா
பல கேள்வி இப்படி
உதித்தாலும் விநாயகா
ஒருகேள்வி மட்டும்
சதா
உறுத்துதே விநாயகா
பலகாரம் பழங்கள்
படையலிட்டு விநாயகா
உன்னை கடலில்
கரைப்பதை
நீ தடுக்க முடியாதா
விநாயகா?