அந்திப் பொழுதின் எழில்தரும் சிந்துநிலா
சிந்தும்தேன் பூந்தமிழ்க் பாக்கள் தெவிட்டுமோ
சிந்துநதித் தேன்நிலாவும் வானத்தில் தேயுமோ
அந்திப் பொழுதின் எழில்தரும் சிந்துநிலா
எந்தன்நெஞ் சில்காயா தே !
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
சிந்தும்தேன் பூந்தமிழ்க் பாக்கள் தெவிட்டுமோ
சிந்துநதித் தேன்நிலாவும் தேயுமோ - சிந்துபாடும்
அந்திப் பொழுதின் எழில்தரும் சிந்துநிலா
எந்தன்நெஞ் சில்காயு மோ ?
-----ஒருவிகற்ப நேரிசை வெண்பா
கவிக்குறிப்பு :
காயுதல் இரு பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது
நற்கவிதை படிப்போர் தேர்ந்து ரசிக்க !