தேன்நிலவின் ஏணி
***********************
கல்யாணம் என்றதும்
துள்ளிக் குதிப்பதும் இல்லை
கல்யாணம் முடிந்ததும்
துக்கப் படுவதில்லை.
*
முகூர்த்த நாட்களில்
ஒய்வே கிடைப்பதில்லை.
முகூர்த்தம் முடிந்ததும்
ஓய்விற்குப் பஞ்சமில்லை.
*
வருசத்தில் பல
திருமணங்கள் கண்டாலும்
ஒரு விவாகரத்தும்
காண்பதில்லை.
*
கல்யாணத்தில் நிறைய
புகைப்படங்கள் எடுத்து விடுகிறார்கள் என்றாலும்
எவரேனும் கொண்டுவந்துக்
காண்பிப்பதும் இல்லை.
*
பதவி ஆசையால் நாற்காலியை
விட்டுக் கொடுக்காதவர்களுக்கும்
ஒருமுறை மாத்திரமே
உட்கார அனுமதிக் கொடுத்தாலும்
ஒரு சிலர் மறுபடி அமரவும்
இடம் கொடுக்கிறது.
*
திகதி குறித்ததும்
தேடி அலைபவர்கள்
தாலி கட்டி முடிந்த கையோடு
உதவியவர்களை மறப்பதுபோல்
மறந்து போனாலும்
தேன் நி்லவுக்குச் செல்லும்
மணமக்களை ஏற்றிவிட்டு
ஒரு ஏணியைப்போல சுயநலமற்றுக் கிடக்கிறது இருக்கிறது
இந்த மணவறை.
**
மெய்யன் நடராஜ்