விமர்சனம் தான் ஒரே வழி
என் எழுது கோல் 
சாடி எழுதுவதுவதற்காக
தலை குணிந்ததில்லை 
விமர்சனம் எழுதுவதற்கு
வெள்ளைக் காகிதத்தை 
என் கரம் விரித்ததில்லை 
அந்த நிலைக்கு தள்ளப்பட்டு 
விடுவேனோ என்ற அச்சம் 
என்னுள்ளே இப்போது எழுந்துள்ளது 
நான் எழுதினால் பல பேர் 
பார்வை திரும்பும் விரும்பும் 
இதனால் நட்பு பாசம் நம்பிகை 
இறக்கும் தீப்பொறி போல் 
சொல் பறக்கும் 
பொய்யான உள்ளங்களில் 
நின்று எரிக்கும் வேண்டாமே 
இந்த விளையாட்டு 
என்று ஒதுங்குகின்றேன்
ஆனால் ஒடுங்கி விடவில்லை 
உள்ளே எத்தனையோ 
கேள்விகள் எழுகின்றது 
தினமும் சிறு சிறு வலியோடு  
வலி நிறைந்து விட்டால் 
விமர்சனம் தான் ஒரே வழி.
  (நான் கூறுவது சரிதானே)
 
                    
