என் ரகசியங்கள்

அவ்வளவு மோசமானவனில்லை நான்..
தனிமையில் மட்டும் உதித்திடும்
போதிமர உபதேசங்களினால்
கடந்து சென்ற நாட்களின் குறிப்பேட்டில்
கிழித்து வைத்த பக்கங்கள்
மிக அதிகமாய் புலப்படுகின்றன...
சில்லறை தராமல் தாண்டி சென்றபின்
சாபம் விட்ட பிச்சைக்காரி
ஏனோ அடிக்கடி நினைவுக்கு வருகிறாள்..
நிர்வாகப்பணத்தில் செலவு செய்த ரகசியங்களும்
முகநூல் தோழியின் அந்தரங்க
உரையாடல்களும்
வெட்டவெளியில் கொட்டிவிட்டதாய் ஒரு நடுக்கம்...
துர்கனவின் ஆரம்பமாய்
கொசு ஒன்று கடித்துக்கொண்டுள்ளது..