தத்துவங்கள்

ஆனை முகத்தின் தத்துவங்கள்

வெண்பா

விநாயகன் தத்வம் விநாசமில் லைக்கேள்
விநாயகன் ஆனை முகத்தான் -- கணாபத்
பெரியதந்தம் ஆணாம் சிறியதுப்பெண் என்றார்
பிறப்பு இரண்டைக் குறிக்கும்

வேழமுக மானுடமா தாழ்வா? விளக்கு. (மானுட=மனித. மா=,காட்டு விலங்கு)
வேழமனி தன்பிறப்பும் மாற்றத்தில் -- ஏழ்பிறப்பும்
மாறும் உயிர்பயிர்சீ வன்மிருகம் மாறிமாறும்
மாற்ற மிலாஉல கில்

என்றும் மாற்றமிலா உலகில் வாழுகின்ற தாவரம் ,மிருகம், நீர்வாழ்வன ஊர்வன பறப்பன
மானுடர், வான் தேவர் இனம் எல்லாம் உயிர்களின் ஏழு உடைகளாகும். ஏ ழு உடைகளையும் உயிர்கள் மாற்றி மாற்றி அணிய அந்த உயிர் என்ன உடையில் இருக்கிறதோ அப்பெயர் சொல்லி அவ்வுயிரை அழைப்பது இயற்கை. அதிலும். ஆண் பெண் என இரண்டு வகை உண்டாம். இதையே விநாயகன் குறிக் கின்றான்

தொடரும்

எழுதியவர் : பழனிராஜன் (6-Sep-19, 12:18 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : thatthuvankal
பார்வை : 200

மேலே