ஒரு நிஜப்பூ

காற்று எழுதிய கவிதையில்
மலர்ந்தது ஒரு நிஜப்பூ
கற்பனை எழுதிய கவிதையில்
மலர்ந்தது ஒரு காகிதப்பூ
கண்கள் எழுதிய கவிதையில்
மலர்ந்தது ஒரு காதல்பூ
நெஞ்சில் மலர்ந்து கவிதையில்
நித்தம் விரியுது அந்தப்பூ !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Sep-19, 11:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே