சந்திராயன்

உன் இன்னொரு முகம் காண்பதில்
எனக்கு என் இன்னும் தாமதம்
உன்னிடமாய் நான் அனுப்பிவைத்த
அந்த ஒற்றைப் பெட்டி இன்னும் பதில் சொல்லவில்லையடி
இன்றைக்கு தெரியும் உன்னிடமாய்
அந்த பெட்டி வந்து சேர்ந்ததென்று
அதனிடமாய் உன் முகம்காட்ட மறுப்பாயோ
நிலவே நீ மவுனிக்காதே
நான் மரணிப்பதில்லை
மறுபடி தொடர்புகளின் எல்லைக்குள்
வந்துவிடுவேன் உன் அந்த ஒருபுன்னகையும்
அப்படியே கவர்ந்துகொள்வேன்
விடியட்டும் காத்திரு
விடைகள்தரும் நம்பியிரு

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (8-Sep-19, 5:05 pm)
பார்வை : 102

மேலே