குழந்தை

ஆழ்கடல் பேரலை
காரிருள் கடும்மழை
பேரிடி பேய்ப்புயல்
முடிவில்லாத்தேடல்
துயிலிழந்து சுகமிழந்து
துர்கனவில் மனம்துடித்து
ஆற்றுவோர் தேற்றுவோர்
பின்விட்டுத்
தூற்றுவோர் இகழ்வோர்
ஆகியோர் தம்
வாய்ச்சொல் அணிந்து
ஓரிறை தனின்
பாதகதி அடைந்து
உயிர்வெறுத்துக்கடைசியில்
மூர்ச்சைநிலையில்
உள்ளங்கையில் பரிசளித்தான்
இறைவன்
ஓர்முத்து..

எழுதியவர் : Rafiq (9-Sep-19, 7:19 am)
சேர்த்தது : Rafiq
பார்வை : 8566

மேலே