ஷெல்லியின் கவிதையும் தோற்கும்

புலர்காலைப் பொழுதில் பூத்தமலர்கள்
கலைந்தாடும் கருங்கூந்தலில் சேர்ந்து புது நந்தவனமாகும் !
செவ்விதழ் தன்னில் செவ்வானம் சிவந்து
நிலவுத் தூரிகையால் எழிலோவியம் தீட்டும் !
விழிகள் மூடித்திறக்கும் அழகினில்
கம்பனின் காவியம் எழிலாயிரம் பாடும் !
மௌனப் புன்னகை எழுதும் வெண்மைப்பாவில்
ஷெல்லியின் கவிதையும் தோற்கும் !
அசைந்து நடந்து வரும் அழகை ரசித்தால்
ஷேஸ்பியரின் அடுத்த நாடகமோ என்று எண்ணத் தோன்றும் !
விரிந்த பொழிலில் மலர்ந்த தாமரையே
வளர்பொதிகை மலையினில் பூத்துவந்த செந்தமிழே !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-19, 10:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே