வர்ணிக்க சொல்கிறாய்

வர்ணிக்க சொல்கிறாய்
உனக்கொன்றும் பெரும் சுமை இல்லை உனை வர்ணிக்க நான் உன் விழி பார்க்க வேண்டும்.
உன் விரல் அளவேனும் தெரிந்திருக்க வேண்டும்.
உன் கேசதனை அள்ளி பார்க்க வேண்டும்.
உன் பாதத்தின் அழகு தனை ரசித்திருக்க வேண்டும்.
உன் மணம் தனை உணர்ந்திருக்க வேண்டும்.
இவ்வளவு இருக்க கன்னம் தொட்டிருக்கும் அம்முகப்பருக்களிலேயே தொலைந்த நான் எப்போது உன் விழி நோக்கி பாதம் பார்த்து எழுதுவது. ❤❤

எழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 11:24 am)
சேர்த்தது : நிர்மலன்
Tanglish : varnika solkiraai
பார்வை : 227

மேலே