அவள் கண்கள்

அதோ அந்த பூந்தோட்டத்தில்
பூத்திருக்கும் பூக்கள் நடுவில்
அவள் மண்ணில் அமர்ந்து
மலர்களின் எழிலில் மனம் சேர
அதன் மணத்தில் மெய்மறந்து
கண் மூடி …..ஆனந்த நிலையில்….
அருகே சென்ற என் அரவம் கேட்டு
கண் விழிக்கிறாள் மலர்விழியாள்
என்னைப் பார்க்கிறாள் அவள்
கண்களையே பார்க்கின்ற என் கண்கள்
மூடியிருந்த அவள் கண்களை பார்த்தேன்
அது ஒரு திரை மூடிய நாடக மேடை
இதோ பார்க்கும் அந்த கண்கள்
ஒவ்வோர் பார்வையிலும் ஒரு பாவனைக் காட்ட
கண்களில் நவரசம் ததும்புகிறது
பேசாது மௌனிக்கின்றாள்
கண்ணால் பேசுகிறாள்
அவள் கண்களே அவளாய் மாறியது
இப்போது காதலியாய் என்னோடு
உறவாட
இவள் கண்களில் உறவு சேர்க்கும்
நூறு நிலவு உலாவி வருவதைக்
கண்டேன்… கண்ணே உன் கண்கள்
அசாத்தியம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Sep-19, 3:46 pm)
Tanglish : aval kangal
பார்வை : 351

மேலே