ரங்கசாமியும் ரங்கநாத சாமியும்

ரங்கநாதசாமியும் ரங்கசாமியும்

அவர்
ஆண்டவன்
இவரும் ஆண்டவன்தான்
புதுவையை

அவர்
திருச்சியில்
பள்ளி கொண்டவன்
இவர் திலசையில்
பள்ளி கொண்டவன்

அவர்
கருவறையில்
இருப்பவர்
இவர்
கருவறையில்
இருந்தவர்

அவர்
இரு பெண்ணை
மணந்தவன்
இவரோ
ஏழைக்காக இந்த
மண்ணை மணந்தவர்

நடேசன்
அவருக்கு மாமன்
இவருக்கோ தந்தை

பாஞ்சாலி
அவரின் தங்கை
இவருக்கோ அன்னை

அதிகேசவனுக்கு
அவர் கண்ணன்
ஆதிகேசவன்
இவரின் அண்ணன்

அவர்
அவதாரம் படைத்தவன்
இவரோ
அதிகாரம் படைத்தவரோ

அவர்
திரியனையில் எரியும் ஒளி
இவர் அரியணையில் ஏறி
ஏழைக்குக் கொடுத்தார் ஓளி

அவர் இறைவன் இறைவித்தவன்
இவரோ இலவசங்களை
மக்களுக்கு வாரி இரைத்தவர்

அவர் பூமியைக் காக்க
எடுத்த அவதாரம் நரசிங்க சாமி
அவரே புதுவையைக்
காக்க எடுத்த அவதாரம்தான்
ந. ரங்கசாமி

அவர்
விண்ணிலிருந்து
மண்ணிற்கு வந்தவன்
இவர்
பெண்ணிலிருந்து
மண்ணிற்கு வந்தவன்

நமச்சிவாயம்
அவரின் மாமன்
இவர்
நமச்சிவாயத்திற்கு
மாமன்

அவர்
பால முருகனுக்கு வேலை
கொடுத்தவர்
இவர் பல முகங்களுக்கு
வேலை கொடுத்தவர்

அவர்
பெருமாள்
இவர் அவரை
வென்றவர்
மக்கள் மனதில் நின்றவர்

அவர் இருப்பிடம்
கோயில் வீதி
இவர் இருப்பிடமோ
விநாயகர் கோயில் வீதி

அவர் படைத்தது
மருத்துவனை
இவர் படைத்தது
மருத்துவமனை

அவர்
இருப்பதோ எட்டுத் திக்கு
இவர் இருக்குமிடம்
மக்களின் தாகம்
தணிக்கும் ஜக்கு

அவர் கையிலிருந்து
சக்கரம் பிரியும்
இவரோ
சக்கரமாய்த் தேய்ந்து
கையிலிருந்து பிரிந்தவன்

அவர் திருமலை வாசன்
இவர் எரிமலை வாசன்

அவர் பரந்தாமன்
இவர் பரம
ஏழைகளின் மாமன்

அவர் பள்ளிகொண்ட
சீனிவாசன்
இவர் பள்ளி கட்டிய
ஞானிவாசன்

அவர் வரதராஜன்
இவர் ராஜராஜன்

அவர் கடைந்த கல்
இவர்தான் கடவுள்

அவர் சிங்கசாமி
இவர்தான் ரங்கசாமி

அவர் தங்கசாமி
இவர்தான் எங்கசாமி

அவர் பூமியை ஆண்டவன்
இவர் புதுவையை ஆண்டவன்


கவிஞர் புதுவைக் குமார்

எழுதியவர் : புதுவைக் குமார் (15-Sep-19, 11:40 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 58

மேலே