முத்து

முத்து

அனைவரின் வாயிலும்
உமிழ் நீர் சுரக்க
உன் வாயில்
மட்டும் தமிழ் நீர் சுரக்கிறது

நீ சிப்பி கிண்ணத்தில்
கொடுத்த முத்தல்ல
தமிழன்னை எங்கள்
கன்னத்தில் கொடுத்த முத்து

நீ
கடல் கண்ட
முத்து அல்ல
மனித உடல்
கொண்ட முத்து

புதுவையில்
தமிழ்ச்சங்கம்
சேர்த்து வைத்த சொத்து

முத்து அல்ல நீ
தமிழைக் கடைந்து
அமுத்தெடுத்த மத்து

சிற்பிக்குப் பிறந்த
முத்தல்ல நீ
சிந்திக்கப் பிறந்த
முத்து

தமிழுக்கு உணவூட்டிய
உன் கை விரல்கள் பத்து
நோய்கண்ட தமிழுக்கு
உன் பத்து விரல்கள்தான்
போட்டது பத்து

உன்னால் தமிழுக்கு
கூடியது சத்து
உன்னாலே தமிழுக்கு
கெத்து

உன் புகழுக்கு
இல்லை அத்து
தமிழைப் பழிப்போருக்கு
கொடுப்பாய் குத்து

உன்பால் அனைவருக்கும்
அன்பெனும் பித்து
குழைந்தை பொல்
ஏதும் நீ அறிவதில்லை
சித்து

தமிழுக்குத் தொண்டு
செய்தாய் உன் சொத்தை
வித்து
இளம் கவிகளுக்கு
நீயே வித்து

உன்னால் வளர்கிறது
தமிழ்ச்சங்கம்
நீ சபாரி அணிந்து
நடந்துவரும் இரண்டு கால்
சிங்கம்

தமிழ் வாழ
நீ ஊராண்டும்
நூறாண்டும்
இப் பாராண்டும்
வாழ அன்போடு வாழ்த்துகிறேன்

எழுதியவர் : புதுவை குமார் (15-Sep-19, 11:41 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : muththu
பார்வை : 60

மேலே