சங்கமம்
திங்கள் உன்சங்கமம்
நீலத்துடன் காதல்வான வீதியில் !
தென்றல் உன்சங்கமம்
வண்ணமலருடன் நந்தவனத்தினில் !
பொங்கும்நதிகளே உங்கள் சங்கமம்
பிரயாகை திரிவேணியில் !
கவிதைகளே உங்கள் சங்கமம்
கணினி எழுத்துத் தளத்தினில் !
காதலே உன்சங்கமம்
இருவர் நெஞ்சினில் !