காதல்

நிலவு முற்றத்தில் நான்,
நிலவிற்காக காத்திருக்க
நிலவோ எனோ தெரியவில்லை
கருமேகத்தின் பின்னே இன்னும்
மறைந்திருக்க ……..இரவின்
இருளைக்கிழித்து மண்ணில்
ஓர் நிலவு மெல்ல உலாவி
என்முன் தோன்றியது
கள்ளமில்லா வெள்ளி நிலா
வாய்திறந்து முல்லைச்சரம் ஆனது
தென்றல் வந்து என்னைத் தொட்டது
நீ தேடிய வான் நிலவு நட்பே
உன்னவள் நிலவாய் உன்முன் உலவ
வெட்கத்தால் ஓடி ஒளிந்து
ஒழியட்டும் உனக்கேன் இனி கவலை
நிலவு மங்கை உன் காதலி
உன்னைத்தேடி மண்ணில் உலவ

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Sep-19, 8:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 79

மேலே