அழகை

முழுநிலவை மறைக்கத்
துடிக்கும் மேகமாய்

மறைக்கதான் முயற்சிக்கிறாய்
நீயும் உன்னழகை

மறைக்கமுடியாது தோற்ற
மேகமாய்

விலகிதான் போகிறாய்

மறைக்க முயற்சிக்காது
விலகியிருந்தால்

பார்க்கும் ஆவல் எழுந்திருக்காது
எனக்கு

என்னை தூண்டிவிட்டு
மறைத்ததால்

விளக்கமுடியா மனநிலையில்

தடுக்க முடியா ஆவலாய்

விளக்கிப் பார்க்கத் தோணுதடி

.,

எழுதியவர் : நா.சேகர் (17-Sep-19, 9:42 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : alagai
பார்வை : 218

மேலே