பெரியார் போற்றி

அதிகாரம் அழித்தாய் போற்றி
ஆதிக்கம் எதிர்த்தாய் போற்றி
சமத்துவ சிந்தனையே போற்றி
கண்ணாடி கருஞ்சுரியனே போற்றி !! போற்றி !!

திராவிடத் தந்தை போற்றி
சுயமரியாதை நெருப்பே போற்றி
வெண்தாடி வேந்தே போற்றி
அரக்கர்தம் தலைவா போற்றி !!! போற்றி !!!

அறியாமையிருள் அகற்றினாய் போற்றி
பெண் விடுதலை செம்மல் போற்றி
சொத்தில் சமபங்கு கேட்டாய் போற்றி
போரட்டப் பெருந்தகையே போற்றி !!! போற்றி !!!

மனிதநேய மாண்பே போற்றி !
மாற்றுக்கருத்தை மதித்தாய் போற்றி !
நாலு வர்ணம் இகழ்ந்தாய் போற்றி !!!
நாங்கள் வர வழிசெய்தாய் போற்றி !!! போற்றி !!!!

தொன்னூற்றினாலிலும் உழைத்தாய் போற்றி !
மூத்திரச்சட்டி சுமந்தாய் போற்றி !!
அடிமை விலங்கு உடைத்தாய் போற்றி !!!
உரிமை உணர்த்திய உத்தமரே போற்றி!!!! போற்றி !!!!!

தமிழில் மதத்தை பிரித்தாய் போற்றி
எழுத்துச் சீர்திருத்தம் செய்தாய் போற்றி
தீண்டாமை கொடுமை உடைத்த
பெரிய கறுப்பே போற்றி!!! போற்றி !!!

எழுதியவர் : பாவி (17-Sep-19, 9:15 pm)
சேர்த்தது : பாவி
Tanglish : periyaar potri
பார்வை : 4278

மேலே