எப்படி பறக்கிறது

ஒவ்வொரு கணமும்
என்னை கடக்கும் போதும்
என் மரணத்தை
அறிவித்து விட்டே செல்கிறது
என் ஒவ்வொரு செயலும்
முடிவை நெருங்கும் முன்
என் திறமையை மதிப்பிட்டு விட்டே செல்கிறது
கடந்ததை பற்றி நினைப்பதும்
நிகழ்வதை அச்சத்தோடு எதிர்கொள்வதும்
எதிர் வருவதை
ஏதோ என்னை மூழ்கடிக்கப்போகும்
கடலாய் நினைத்து
அஞ்சுவதுமாய் இருக்க
என் முன்னே பறக்கும் குருவி மட்டும்
எப்படி சுதந்திரமாய் பரக்க்கிறது
எந்த ஒரு கவலையும் இல்லாமல்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (18-Sep-19, 12:24 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 20

மேலே