முற்றுப்பெறா உறவு

அவள் பார்வை இவன் மீது
இவன் பார்வை அவள் மீது
பார்வையில் உதயம் ஓர் உறவு
இருவரும் பின் பேச வளர்ந்தது உறவு
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
மேனியும் மேனியும் நெருங்கி பிணைய
மோகம் வந்து அது காமம் தந்திட
இந்த உறவு உறவின் உச்சியை நோக்கி
போய்க்கொண்டிருக்க காதல் எனும்
கொடியை அங்கு ஏற்றி வெற்றிகொண்டாட நினைக்க
வீணையின் தந்தி அருந்ததுபோல் முறிந்தது
இவர்கள் உறவு முறித்தது ஜாதி
முறித்தவர் பெற்றோரும் உற்றோரும்
இவர்கள் வளர்த்த உறவில் இவர்களே காணா ஜாதி
இவர்களை பிரித்து முறித்தது
இமயம் சென்றவன் கோடி ஏற்றும் முன் மாண்டதுபோல்
இவர்கள் உறவு முறிந்தது முடிந்தது
முற்று பெறாமலே காதலாய் மலரும் முன்னே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Sep-19, 1:51 pm)
பார்வை : 37

மேலே