மரபு
மரபு
````````````````````````````````
தலையை நீவினால் வாலை ஆட்டுவது
தலைமுறை தலைமுறையாய் நடக்கும் நிகழ்வே
பொறியைத் தூவினால் வலையில் விழுவது
புதிதாய் நடக்கும் சதியொன்றும் அல்ல
மலையில் விழும் மழை தரையில் தவழ்ந்திட
மந்திரம் போட தேவையே இல்லை
புகழ்ச்சிக் கடலில் புதையுண்ட எவளும்
மிகையாய் தப்ப மீள் கலம் இல்லை
வருணணை என்பதும் வலைக்குள் பொறியே
வருத்தம் இன்றி இதில் மீள்பவர் சிலரே......
க.செல்வராசு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~