ராகம் என்னைத் தொடர்ந்தது

வீணையில் மிதந்து வந்த
ராகம்
வீதியில் நடந்து சென்ற
என்னைத் தொட்டது
அந்த ராகத்தின் பெயர்அறியும் அளவிற்கு
எனக்கு இசை ஞானம் இல்லை
ஆனால் ரசிக்கும் இரண்டு காதுகள் உண்டு
சாளரத்தின் அருகே நின்று
கேட்டுக் கொண்டிருந்தேன்
இளம் சாரலில் நனைந்த உணர்வு !
நின்ற பின் மெல்ல நடந்த போது
உரு மொழி பெயர் ஏதுமின்றி
ராகம் என்னைத் தொடர்ந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-19, 10:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே