உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 🌹

தேக்கி வைத்த கனவுகள் நினைவாகபோகுது.
வாட்டி எடுத்த இரவு இனி இன்பமாக போகுது.
சிற்றின்ப ஆற்றினிலே நீந்தி மீண் பிடிக்க போகுது.
அலங்கார தேர் ஆடம்பரமாக
அருகில் வந்து நிற்க,
ஆனந்த கூத்தாடி
ஆசையாய் அனைத்து
ஆரவார
ஆட்டத்திற்கு
ஆயத்தம்.

'கண்கள்' காதலுக்கு இடை கால விடை கொடுத்து 'காம' அத்தியாயத்தை அறிமுக படுத்தியது.
'ஆசை ஜோடியின்' அந்தரங்க விளையாட்டு ஆரம்பம் .
உயிர்களின் உரிமை மீறல் உறவுக்குள் புகுத்தது.
உண்மையை தெரிந்து கொள்ள உள்ளங்கள் துடித்தது.
இடைவெளி குறைந்து இன்பத்தை தேடியது.
வழிவழியாய் பயின்ற மானுட இலக்கியங்களை
உச்சி முதல் பாதம் வரை
இனிதாய் படித்தது.
காமத்தின் ஆட்சி ஆட்டிபடைத்தது.
ஆடைகளுக்கு விடுப்பு அளித்து ஆலிங்கனதுக்கு ஆயத்தமானது
சிற்றின்பத்தின் உச்சியை சிறப்பாய் தொட்டது.
உயிர்களின் நிறைவேறிய ஆசை தற்காலிக முடிவு அடைந்தது.
ருசி கண்ட பூனை
மீண்டும் மன்மத பாடம் படிக்க ஏங்கியது.
ஒவ்வொரு முறையும் பயிலும்போது புது அனுபவம் அடையும்.
ஆண், பெண் உறவு இந்த உலகம் உள்ளவரை தொடரும்.
மானுட சங்கிலி நீளும்.

- பாலு.

எழுதியவர் : பாலு (22-Sep-19, 12:19 am)
சேர்த்தது : balu
பார்வை : 275

மேலே