புத்தகம்
வழியில்லா மனித பிண்டங்களுக்கு
விழியின் ஒளியாவது #புத்தகம்
வெற்றியில்லா உடைந்த மனதிற்கு
வற்றாத நம்பிக்கைதருவது #புத்தகம்
போதிதர்மன் கண்ட மருத்துவத்தை
புதைத்து வைத்திருப்பது #புத்தகம்
புத்தன் கூறிய பொன்மொழிகள்
போதிமரநிழலாய் பொழிவது #புத்தகம்
காதலின் எண்ணங்களை கவிஞன்
கவிதைகளாய் வெளயிடுவது #புத்தகம்
கம்பன் வள்ளுவன் பாரதியை
கண்களுக்கு அறிமுகம்செய்தது #புத்தகம்
விடுதலைப் போராட்ட தியாகிகளின்
வீரத்தை வெளிக்கொணர்ந்தது #புத்தகம்
வெவ்வேறு சாதியினரை ஒற்றுமையாக
வீடெனும் நூலகத்திலடைத்தது #புத்தகம்
மதுரை தமுக்கம் மைதானத்தில்
முதன்மை கண்காட்சியாவது #புத்தகம்
முதியவர் இளைஞர் குழந்தைகளை
முத்துக்குளிக்க வைப்பது #புத்தகம்
எழுத்தோடு இணையும்
... #ராஜேஷ்...