எங்கு சென்றாள்
வளையும் சிற்றிடை
கலையும் நீழ்கூந்தல்
குழையும் கருவிழிகள்
சிலையும் தோற்கும்
கலைவடிவம் அவள்
வேலை எதுவுமில்லை
நேரம் சிறிதுமில்லை
அலையும் தெரு நாயாய்
அலைகிறது என் மனது
ஒற்றைப் பார்வையாலே
ஓராயிரம் கதை கூறிச்
சென்றாளே காணவில்லை
எங்குதான் சென்றாள் ?
அஷ்றப் அலி