மாயை
மனதில் உதிக்கும் சிந்தனைகள்
ஏன் மறைய மறுகின்றனவோ,
சிந்தனைகளால் பிறப்பெடுக்கும் குழப்பங்கள்
ஏன் இறக்க மறுகின்றனவோ ,
குழப்பங்களால் எழும் மனக்குமுரல்கள்
ஏன் வீழ மறுகின்றனவோ
மனக்குமுரல்களால் அதிகரிக்கும் துன்பங்கள்
ஏன் குறைய மறுகின்றனவோ ,
இவையாவும் மாயை என்றுணர்ந்தமனம்
ஏன் மறுக்க மறுகின்றனவோ .