கயல் அழகி
கயல் அழகி.
'தை'யல் அவள் கயல் விழியாள்
கிராமத்து பைங்கிளியை
'மாசி'மகத்தில் அந்த மதுர கீதத்தை சந்தித்தேன்.
மனதை அவளிடம் பறிகொடுத்தேன்.
'பங்கு இனி' இருக்கிறது மெல்ல
காதலை அவளிடம் சொல்ல
'சித்திரை' வெய்யில் மட்டுமா நித்திரையை கேடுத்தது
நீயும் தான் கண்னே.
திருவிழா, கடைகள் என களைகட்டியது.
'வை காசி' என்று வளையல் கடைகாரர் கறாராக கேட்க
காசு இல்லாமல் அவள் தவிதவிக்க
மிச்ச காசு நான் கொடுக்க
அவள் முகத்தில் ஆனந்தம்.
அந்த நொடி அவளிடம் என் மீது காதல் அருப்பியது .
'ஆ! நீ 'உலக பேரழகி.
'ஆடி' வரும் நாட்டிய பேரொளி.
'ஆவனி' மாதம் மங்கை நீ தாவணிக்கு மாறினாய் .
கூடியது அழகு.
குவிந்தது என் எண்ணத்தில்
உன்னை பற்றிய கவிதை.
'புரட்டு இதை, ஆசி' நிச்சயம் வழங்குவேன் என்று கவிதை தாள்களை கொடுத்தேன்.
படித்தாள்.
பார்வையில் காதல் நிறைய தெரிய.
'ஐ(ய்ய)ப்பசி' கவிதை குறித்து அவளிடம் அதிகமாக இருந்தது.
'கார்த்திகை' தீப ஒளி வெளிச்சத்தில் அற்புதத்திடம் கவிதையை அழகாக விளக்கினேன்.
கவிதையின் லயத்தில்
வெட்கத்தில் நெற்கதிர் போல் நாணி கோணி தலை கவிழந்தாள்.
உரிமையுடன் அவளை நெருங்கினேன்.
தொட்டவுடன் அவள் மின்னல் என ஓடினாள்.
அவள் தாவணி நுனி என் கைகளில் சிக்கி கொள்ள,
'மார் கழி' யை தன் கரங்களை கொண்டு வெட்கத்துடன் என்னை பார்த்து மூடினாள் அந்த அழகிய தமிழ் பெண்.
- பாலு.