தமிழ்

நிழலாக!
————
நிழல் தந்து நிஜம் காண
நின்மதியிங்கு நிழலான

நினைவொன்று தணலாக
நிதமிங்கு உருவாக

மணல் வீடு மனையாக
கனவொன்று நினைவாக

இனமொன்று ஈழம் காண
தவமொன்று தரமாக

தடையின்றி தனக்காக
எழுந்திங்கு விரைவாக

தமிழோடு உரையாட
தமிழோடு தொழிலாக

விடையொன்று விரைவாக
விதியென்று வரமாக

சுயமான அரசொன்று
தெவிட்டாத தீந்தமிழில்

தெளிவாக புரிந்திடவே
தேசமெங்கும் அலைகின்றோம்

விடையொன்று காணாமல்
வீதியெங்கும் நிழலாக!
.........
யோகராணி கணேசன்
02.ஆடி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (24-Sep-19, 3:45 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : thamizh
பார்வை : 2142

மேலே