பறவையாய்
வானத்து பறவையாய்
ஒரிரு நிமிடங்களை
உயர்ந்த கூட்டினில்
களித்திடத்தான் ஆசை
சுற்றுமுற்றும் பார்கிறேன்
எங்காவது ஒரு தென்னங்கூடு
தெரிகிறதா என்று
இல்லவே இல்லை இங்கு
பனிக்காலத்தில் இரு கூடு
மழைக்காலத்தில் ஒரு கூடு
வெய்யில் காலத்தில் மறு கூடு
என சுற்றித்திரியும் பறவையாய்
வாழ்ந்திட பறவைக்கே ஊருண்டு
பிறந்த நாட்டை பிரிந்த வலி
பறவைக்கேது.....
பறவையாய் ஒரு நாள்
பறந்திடத்தான் ஆசை......!
.........
11.வைகாசி 2012
யோகராணி கணேசன்